லைக்குகளை அள்ளிக் குவித்த 'டிவில்லியர்ஸின்' அசத்தல் 'வீடியோ'.. பாராட்டுறது மாதிரியே சைக்கிள் கேப்'ல 'கிண்டல்' செஞ்ச 'மேக்ஸ்வெல்'.. 'வைரல்' கமெண்ட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களை பட்டியலிட்டால், நிச்சயம் ஏபி டிவில்லியர்ஸ் (AB De Villiers) பெயர் முதல் வரிசையில் இடம்பெறும்.

லைக்குகளை அள்ளிக் குவித்த 'டிவில்லியர்ஸின்' அசத்தல் 'வீடியோ'.. பாராட்டுறது மாதிரியே சைக்கிள் கேப்'ல 'கிண்டல்' செஞ்ச 'மேக்ஸ்வெல்'.. 'வைரல்' கமெண்ட்!!

சர்வதேச போட்டிகளில் இருந்து டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றிருந்தாலும், அவரது பேட்டிங் மீதான ரசிகர்கள் இன்றளவும் குறையவில்லை. எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும், அதிரடியாக ஆடக் கூடிய டிவில்லியர்ஸ், Mr. 360 என அழைக்கப்படக் கூடியவர். அது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக தற்போதும் ஆடி வரும் இவர், பல போட்டிகளில் தனியாளாக அதிரடி காட்டி, வெற்றிகளையும் தேடிக் கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி காட்டும் டிவில்லியர்ஸ், ஒரு நல்ல பாடகரும் கூட. இவர் கடந்த மே மாதம், தனது பேவரைட் பாடல் ஒன்றைப் பாடி, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் தான் பாடும் பாடல் ஒன்றின் வீடியோவை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது தந்தையின் 70 ஆவது பிறந்தநாளுக்காக, மனைவியுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார் டிவில்லியர்ஸ். மேலும், தனது கேப்ஷனில், தந்தையின் பிறந்தநாளுக்காக இந்த பாடலை பாடியுள்ளோம் என்றும், என்ன நடந்தாலும் கடவுள் நம்முடன் இருப்பார் என்ற உணர்வை இந்த பாடல் தரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமில்லாமல், தனது தந்தையைக் குறிப்பிட்டு, அவர் எனது தந்தையாக கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்றும் கூறியிருந்தார்.

 

இந்த வீடியோ, ரசிகர்களிடம் அதிகம் வைரலான நிலையில், ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) டிவில்லியர்ஸை பாராட்டியது போல், கலாய்த்து கமெண்ட் ஒன்றைச் செய்துள்ளார். 'இதற்கு முன்பு நீங்கள் பாடிய பாடலை விட, இதில் சற்று முன்னேற்றம் தெரிகிறது' என தெரிவித்துள்ளார். இந்த கமெண்ட்டும் தற்போது நெட்டிசன்கள் மத்தியல் அதிகம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில், டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் இணைந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்காக ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்