Video : "ஆத்தி, இப்டி ஒரு 'ஃபீல்டிங்' எல்லாம் சத்தியமா பாத்ததே இல்ல..." ஆச்சரியத்தில் உறைந்து நின்ற ரசிகர்கள்!!!... வைரலாகும் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி 20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், 32 ஆவது லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

Video : "ஆத்தி, இப்டி ஒரு 'ஃபீல்டிங்' எல்லாம் சத்தியமா பாத்ததே இல்ல..." ஆச்சரியத்தில் உறைந்து நின்ற ரசிகர்கள்!!!... வைரலாகும் 'வீடியோ'!!!

டக்வொர்த் லீவிஸ் முறைப்படி மெல்போர்ன் அணிக்கு 10 ஓவர்களில் 129 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சற்று கடின இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்த நிலையில், கடைசி இரண்டு ஓவர்களில் மெல்போர்ன் அணியின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது.

இந்நிலையில், 9 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட நிக் லார்கின், பந்தை சிக்சரை நோக்கி ஓங்கி அடிக்க, சிக்ஸர் லைனுக்கு அருகே நின்ற பிரையண்ட் மிக அற்புதமாக ஃபீல்டிங் செய்தார். அனைவரும் பந்து சிக்ஸ் தான் எதிர்பார்த்த நிலையில், ஒரு கையைக் கொண்டு பந்தை தடுத்து பவுண்டரி ரன்களை அணிக்காக காப்பாற்றினார் பிரையண்ட். 

 

இதனைக் கண்ட ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். பிக் பாஷ் தொடரில் செய்யப்பட்ட மிகச் சிறப்பான ஃபீல்டிங் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்