‘11 வருசத்துக்கு அப்புறம் IPL-ல் ரீ-என்ட்ரி’.. முதல் போட்டியே சிறப்பான முத்திரை பதித்த வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய வீரர் மீண்டும் விளையாட வந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டி நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய குஜராத் அணி 19.4 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராகுல் திவாட்டியா 40 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களும், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தலா 30 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 11 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியதன் மூலம் ஐபிஎல் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த தொடரில் அவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனை அடுத்து நடந்த ஐபிஎல் ஏலத்திலும் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. இந்த சூழலில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மேத்யூ வேட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக அந்த அணியை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்ல மேத்யூ வேட் முக்கிய காரணமாக இருந்தார். அதனால் இவரை ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்தது.
இந்த நிலையில், நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய மேத்யூ வேட், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணி சரிவில் இருந்த போது, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கை கொடுத்தார். 29 பந்துகளில் எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடித்து அசத்தினார்.
மற்ற செய்திகள்