"டிப்ஸ் கிடைக்குமான்னு ஜடேஜாகிட்ட கேட்டேன், அப்ப அவர் சொன்ன பதில்".. மனம்திறந்த ஆஸ்திரேலிய வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்து வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

"டிப்ஸ் கிடைக்குமான்னு ஜடேஜாகிட்ட கேட்டேன், அப்ப அவர் சொன்ன பதில்".. மனம்திறந்த ஆஸ்திரேலிய வீரர்!!

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | கோர்ட்டுக்கு போற வழியில.. தப்பித்து போன நபர்.. மீண்டும் நீதிமன்றத்தில் சரண் அடைந்த வினோத சம்பவம்!!

முன்னதாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் தக்க வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தது.

திணறிய இந்திய அணி

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, 109 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், மேத்யூ குஹ்னேமேன் 5 விக்கெட் எடுத்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி இருந்த ஆஸ்திரேலியா அணி, ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தாலும் கடைசி கட்டத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 11 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 197 ரன்களில் ஆல் அவுட் ஆகி இருந்தது.

Matthew Kuhnemann about tips to jadeja his funny reply

Images are subject to © copyright to their respective owners.

வெற்றி பெற்று அசத்திய ஆஸ்திரேலியா

இதனையடுத்து 88 ரன்கள் பின்தங்கிய சூழலில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி இருந்தது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அதிக தடுமாற்றம் கண்டது. மேலும் புஜாரா மட்டும் 59 ரன்கள் எடுத்து அவுட்டாக, இந்திய அணி 163 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இரண்டாவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி பட்டையைக் கிளப்பி இருந்தார்.

Matthew Kuhnemann about tips to jadeja his funny reply

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து, 76 ரன்கள் என்ற இலக்குடன் மூன்றாவது நாளில் ஆடியிருந்த ஆஸ்திரேலிய அணி, ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 19 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற சூழலில், ஆஸ்திரேலிய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி தற்போது தகுதி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மார்ச் ஒன்பதாம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற உள்ளது.

Matthew Kuhnemann about tips to jadeja his funny reply

டிப்ஸ் கேட்ட ஆஸ்திரேலிய வீரர்

இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவிடம் டிப்ஸ் கேட்டது பற்றி ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னேமேன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

"இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சில நுணுக்கங்களை செய்தார். பந்து பழையதாக மாறும் போது அவர் ரிலீஸ் செய்யும் இடத்தை மாற்றுகிறார். இதனால் எதிர்பார்த்த இடத்திற்கு சரியாக பிட்ச் செய்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இந்த நுணுக்கத்தை நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதை செயல்படுத்தினேன்.

ஜடேஜா, எனக்கு ஏதாவது டிப்ஸ் தருகிறீர்களா? என அவரிடமே கேட்டேன். 'இருக்கிறது, ஆனால் அந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு கூறுகிறேன்" என சிரித்தபடி மேத்யூ குஹ்னேமேன் தெரிவித்தார்.

Also Read | "233 ஆவது தோல்வி".. வாக்களிச்ச 6 பேருக்கும் நன்றி, மகிழ்ச்சியா இருக்கு.. தேர்தல் மன்னன் பத்மராஜனின் அதிரடி ஸ்பீச்!!

CRICKET, MATTHEW KUHNEMANN, JADEJA, IND VS AUS

மற்ற செய்திகள்