RRR Others USA

இந்திய வீரரை 'குப்பை' என குறிப்பிட்ட முன்னாள் CSK வீரர்.. 'Man of the Match' வாங்கிய வீரருக்கா இந்த சோதனை?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் முறையே, கொல்கத்தா, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள், வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ளது.

இந்திய வீரரை 'குப்பை' என குறிப்பிட்ட முன்னாள் CSK வீரர்.. 'Man of the Match' வாங்கிய வீரருக்கா இந்த சோதனை?

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி இருந்தன. இதில், கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

இலக்கை எட்டி பிடித்த கொல்கத்தா

ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சென்னை அணி, 100 ரன்களைத் தாண்டுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் பவுண்டரிகளை விரட்டிய தோனி, அரை சதமடித்து, 131 ரன்களை எட்ட உதவினார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, 19 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றிருந்தது.

பவ்ரபிளேயில் அபாரம்

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆட்ட நாயகன் விருதினை தட்டிச் சென்றிருந்தார். முதல் ஓவரில், ருத்துராஜை டக் அவுட் செய்த உமேஷ், மற்றொரு தொடக்க வீரர் கான்வேயை 3 ரன்களில் அவுட் செய்தார் உமேஷ். இரண்டு முக்கிய விக்கெட்டுகளை பவர்பிளேவில் காலி செய்த உமேஷ் யாதவ், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்தார். மேலும், இதுவரை 9 முறை, ஐபிஎல் தொடரில் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள உமேஷ், அதிக முறை ஐபிஎல் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

ஹைடனின் கருத்தால் பரபரப்பு

இந்நிலையில், கான்வேயின் விக்கெட்டை உமேஷ் யாதவ் எடுத்த போது, வர்ணனையில் ஈடுபட்டு வந்த ஹைடன் சொன்ன விஷயம், ரசிகர்களை அதிகம் கடுப்பு ஆக்கியுள்ளது. "மற்றொருவரின் குப்பை, தற்போது கொல்கத்தா அணியின் பொக்கிஷமாக மாறி விட்டது" என உமேஷ் யாதவை குறிப்பிட்டார்.

Matthew Hayden someone else trash on umesh make fans angry

சமீப காலமாக, பெரிய அளவில் தன்னுடைய பந்து வீச்சில் தாக்கம் ஏற்படுத்தாமல் இருந்து வரும் உமேஷ் யாதவ், தற்போது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே தன்னுடைய திறனை நிரூபித்துள்ளார். அப்படி இருக்கும் போது, ஒருவரை குப்பை என எப்படி குறிப்பிடலாம் என ரசிகர்கள், ஹைடனின் வார்த்தையை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Matthew Hayden someone else trash on umesh make fans angry

இந்திய அணி வீரரை குப்பை என குறிப்பிட்டுள்ள சம்பவம், அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹைடன் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Matthew Hayden someone else trash on umesh make fans angry

CSK VS KKR, UMESH YADAV, MATTHEW HAYDEN, உமேஷ் யாதவ், மேத்யூ ஹைடன்

மற்ற செய்திகள்