"அம்மாடியோவ்.. என்ன கேட்ச்'ங்க இது??".. கிரிக்கெட் ரசிகர்களை மிரள வெச்ச வீடியோ!!.. "பாவம்யா அந்த பேட்ஸ்மேன்!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் போட்டியைக் காண உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அது மட்டுமில்லாமல், கிரிக்கெட் போட்டி என்றாலே விளையாட்டு என்பதைத் தாண்டி, ஒரு விதமான உணர்வு என்பதும் கிரிக்கெட் போட்டியின் மூலம் ரசிகர்களால் உணர முடியும்.
அப்படிப்பட்ட கிரிக்கெட் விளையாட்டில், அவ்வப்போது மிகவும் வினோதமான, வேடிக்கையான அல்லது அபூர்வமான நிகழ்வுகளும் அரங்கேறி இது தொடர்பான வீடியோக்கள் கூட பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைக்கும்.
உதாரணத்திற்கு நம்பவே முடியாத வகையிலான ரன் அவுட் மற்றும் கேட்ச்கள் உள்ளிட்ட கிரிக்கெட் உலகில் நடைபெறும் ஏராளமான விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகும்.
அந்த வகையில், தற்போது வீரர் ஒருவர் எடுத்த கேட்ச் தொடர்பான வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் மிரள வைத்து வருகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் Matt Renshaw. முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி கவனம் ஈர்த்த ரென்ஷா, ஆஸ்திரேலிய சர்வதேச கிரிக்கெட்டின் டெஸ்ட் அணிக்கும் தேர்வாகி இருந்தார்.
11 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள ரென்ஷா, இந்த ஆண்டு ஒரு நாள் தொடருக்கான அணியிலும் தேர்வாகி இருந்தார். இதனையடுத்து, தற்போது அவர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் கோப்பை (Royal London Cup) தொடரில், சோமர்செட் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில், சர்ரே அணிக்கு எதிரான போட்டியின் போது, ஸ்லிப்பில் நின்ற ரென்ஷா எடுத்த கேட்ச் தொடர்பான வீடியோ, ரசிகர்கள் பலரையும் திகைக்க வைத்துள்ளது. சர்ரே வீரர் ரியான் படேல் அடித்த பந்து, அவரது பேட்டில் பட்டு அவுட்சைடு எட்ஜ் ஆகவே, ஸ்லிப்பில் நின்ற ரென்ஷா அருகே பந்து சென்றது. சற்று விலகிச் சென்றாலும், ஸ்லிப்பில் நின்ற ரென்ஷா, மிக அற்புதமாக தாவி போய் அதனை பிடித்தார்.
கேட்ச் எடுக்க முடியாது என பலரும் கருதி இருந்த நிலையில், ஒரே நொடியில் அதனை மாற்றி மிகவும் அற்புதமாக டைவ் அடித்து கேட்சாக மாற்றினார் ரென்ஷா. சமீபத்தில் எடுக்கப்பட்ட கேட்ச்களில், இது சிறந்த கேட்ச் என ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களையும் ரசிகர்கள் பலர் மிரண்டு போய் பகிர்ந்து வருகின்றனர்.
One of the greatest catches you will see in a long time...
LIVE STREAM ➡️ https://t.co/dF6GhNA901 #SURvSOM#WeAreSomerset https://t.co/hEzrqhCsx8 pic.twitter.com/cIGNGmLhhX
— Somerset Cricket 🏏 (@SomersetCCC) August 17, 2022
மற்ற செய்திகள்