"பாஸ்போர்ட் எங்க?.. உடனே இந்தியா கிளம்பனும்".. இளம் வீரரை களமிறக்கும் ஆஸ்திரேலியா.. ஸ்கெட்ச் பயங்கரமா இருக்கும் போலயே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக மாட் குஹ்னேமன் எனும் இளம் வீரரை அணியில் சேர்த்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி. 

"பாஸ்போர்ட் எங்க?.. உடனே இந்தியா கிளம்பனும்".. இளம் வீரரை களமிறக்கும் ஆஸ்திரேலியா.. ஸ்கெட்ச் பயங்கரமா இருக்கும் போலயே..!

Images are subject to © copyright to their respective owners.

Also Read | “பார்வைய இழந்துட்டேன்.. என்ன விட்டு போய்டுனு அழுதேன்.. ஏன் போகல?” .. நீயா நானாவில் பெண் உருக்கம்.. கணவர் கூறிய நெகிழ்ச்சி பதில்.!

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியை எதிர்கொள்கிறது. அந்த வகையில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த போட்டியை பொறுத்தவரையில் இந்திய அணியின் அஸ்வின் 8 விக்கெட்டுகளையும் ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற செய்திருந்தனர்.

Matt Kuhnemann replaced Mitchell Swepson in Australia squad

Images are subject to © copyright to their respective owners.

இந்திய அணி வீரர்களின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என முன்கூட்டியே பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலிய அணி இளம் சுழற்பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டுவந்திருக்கிறது. சுழற்பந்துக்கு இந்திய மைதானங்கள் சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மாட் குஹ்னேமன் 12 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ளார். அதேபோல, இலங்கை மற்றும் சென்னையில் நடைபெற்ற சில சிறிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனுபவமும் மாட் குஹ்னேமனுக்கு உண்டு என்பதால் இந்த முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கிறது.

Matt Kuhnemann replaced Mitchell Swepson in Australia squad

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து மாட் குஹ்னேமன் பேசுகையில்,"ஷெஃபீல்டு ஷீல்டு அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தேன். 3 ஆம் நாளின்போது தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி போன் செய்தார். மிட்சல் ஸ்வெப்சன்-க்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட வேண்டும். திங்கட்கிழமை கிளம்பவேண்டும். உங்களது பாஸ்போர்ட்டை மேல்போர்னுக்கு எடுத்து வரமுடியுமா? என கேட்டார். நல்ல வேளையாக பாஸ்போர்ட் என்னிடமே இருந்தது. இது ஒரு நல்ல வாய்ப்பு" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை துவங்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் மாட் குஹ்னேமன் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக பேசி வருகின்றனர்.

Also Read | "அவங்க ரெண்டு பேரும் தான் குரு".. CSK பத்தி எய்டன் மார்க்ரம் EXCLUSIVE.. மனுஷன் பெரிய FAN-ஆ இருப்பாரு போலயே..!

CRICKET, MATT KUHNEMANN, MITCHELL SWEPSON, AUSTRALIA SQUAD

மற்ற செய்திகள்