"ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய முயற்சியா?!!!"... 'பிளேயரின் புகாரால் பரபரப்பு'... 'விசாரணையை தொடங்கியுள்ள பிசிசிஐ!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வீரர் ஒருவரை மேட்ச் பிக்ஸிங் செய்ய சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஐபிஎல்லில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய முயற்சியா?!!!"... 'பிளேயரின் புகாரால் பரபரப்பு'... 'விசாரணையை தொடங்கியுள்ள பிசிசிஐ!'...

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர்  கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வீரர்களும் பயோ-பபுள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள சூழலில், வெளிநபர்கள் யாரும் வீரர்களை சந்திக்க முடியாது.

Match Fixing In IPL2020? ACU Starts Investigation After Players Report

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்வதற்காக சூதாட்ட தரகர்கள் வீரர் ஒருவரை  ஆன்லைன் மூலமாக அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ள பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் அஜித் சிங், "மேட்ச் பிக்ஸிங் செய்ய உதவுமாறு தன்னை ஒருவர் அணுகியதாக ஒரு வீரர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

Match Fixing In IPL2020? ACU Starts Investigation After Players Report

ஊழலில் ஈடுபட முயன்ற நபரை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அவர் பிடிபட சிறிது காலம் ஆகும்" எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஊழல் எதிர்ப்பு நெறிமுறைகளின்படி, ரகசிய நோக்கங்களுக்காக அந்த வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்