Radhe Others USA
ET Others

VIDEO: யோவ் என்னய்யா என்னைய விட்டீங்க.. கிரவுண்டில் இங்கிலாந்து செஞ்ச செயல்.. விழுந்து விழுந்து சிரித்த கமெண்ட்டேட்டர்ஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மைதானத்தில் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: யோவ் என்னய்யா என்னைய விட்டீங்க.. கிரவுண்டில் இங்கிலாந்து செஞ்ச செயல்.. விழுந்து விழுந்து சிரித்த கமெண்ட்டேட்டர்ஸ்..!

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆண்டிகுவா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து தடுமாறியது. இந்த சமயத்தில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன்களை குவிக்க துவங்கியது. இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 142 ரன்களும், விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்துள்ளது.

இந்த நிலையில், 2-ம் நாள் ஆட்டத்தின்போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பவுலிங் செய்துவிட்டு பவுண்டரி லைனில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், அணி வீரர்களை ஆலோசனைக்கு அழைத்தார். இதனை மார்க் வுட் கவனிக்கவில்லை. அதனால் 9 வீரர்கள் மட்டும், ஜோ ரூட் தலைமையில் குழுவாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, பாதி ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த பிறகுதான் மார்க் உட் அதை கவனித்தார். உடனே தானும் ஆலோசனையில் பங்கேற்றதை போல், நின்ற இடத்திலேயே வீரர்கள் தோள் மீது கை வைப்பதுப்போல் சைகை செய்தார். இதனைக் கண்ட ரசிகர்கள், வர்ணனையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MARKWOOD, WIVENG

மற்ற செய்திகள்