‘என்ன மன்னிச்சுடுங்க’... ‘டென்னிஸ் போட்டிக்கு குட்பை’... ‘32 வயதில் திடீர் ஓய்வை அறிவித்த’... ‘சர்வதேச பிரபல வீராங்கனை’... ‘அதிர்ச்சியில் ரசிகர்கள்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டென்னிஸ் போட்டிகளில் 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 32 வயதான ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘என்ன மன்னிச்சுடுங்க’... ‘டென்னிஸ் போட்டிக்கு குட்பை’... ‘32 வயதில் திடீர் ஓய்வை அறிவித்த’... ‘சர்வதேச பிரபல வீராங்கனை’... ‘அதிர்ச்சியில் ரசிகர்கள்’!

1994 முதல் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த ரஷ்ய பெண்ணான மரியா ஷரபோவா, டென்னிஸ் அரங்கில் ரஷ்ய நாட்டு வீராங்கனையாக பங்கேற்றார். 2004-ல் விம்பிள்டனில், அப்போது உச்சத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி உலகை அதிர வைத்தார். தன் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார். அப்போது முதல் நல்ல பார்மில் இருந்த அவர், 5 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றார். டென்னிஸ் அரங்கில் விம்பிள்டன், ஆஸ்திரேலய ஓபன் மற்றும் யு.எஸ் ஓபன் தொடரை ஒரு முறை மரியா ஷெரபோவா வென்றுள்ளார். 

அதே போல் பிரெஞ்சு ஓபன் தொடரை 2 முறை வென்றுள்ளார். உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனையாக பல ஆண்டுகளுக்கு வலம் வந்தவர், இடையில் காயம் காரணமாக தடுமாற்றத்தில் இருந்து வந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது நடைபெற்ற ஊக்கமருந்து சோதனையில் இவர் தோல்வியடைந்ததால் 2 ஆண்டுகள் அவருக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன்பிறகு டென்னிஸ் போட்டியில் விளையாடி வந்த அவர், தற்போது தனது ஓய்வுமுடிவை அறிவித்துள்ளார்.

தனது உடலில் அதிகரித்து வரும் காயத்தின் பிரச்னைகள்  காரணமாக உடல்நலனை பாதுகாக்க முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மரியா ஷரபோவா தெரிவித்துள்ளார். மேலும் என் வாழ்வில் டென்னிஸ் மிகவும் மதிப்புக்குரியது. என்னை மன்னித்துவிடுங்கள். டென்னிஸிலிருந்து நான் விடைபெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

MARIA SHARAPOVA, TENNIS