"தோனிக்கு கெடச்ச ஆதரவு, எங்களுக்கு கெடைக்கல.." பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம்.. யுவராஜ் சொன்ன 'பரபரப்பு' கருத்து..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 2007 ஆம் ஆண்டு, டி 20 உலக கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர்  உலக கோப்பையையும் கைப்பற்றி சாதனை புரிந்தது.

"தோனிக்கு கெடச்ச ஆதரவு, எங்களுக்கு கெடைக்கல.." பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம்.. யுவராஜ் சொன்ன 'பரபரப்பு' கருத்து..

அதிலும் குறிப்பாக, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983 ஆம் ஆண்டு, உலக கோப்பையை வென்ற பிறகு, சுமார் 28 ஆண்டுகளுக்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு, இந்திய அணி தோனி தலைமையில் 50 ஓவர் உலக கோப்பையை வென்றிருந்தது.

இந்த இரண்டு தொடர்களிலும், இந்திய அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங்.

ஒரே ஒரு தொடரால் விமர்சனம்

இதில், 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதினையும் யுவராஜ் சிங் வென்றிருந்தார். ஆனால், 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக, டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில், மிகவும் மெதுவாக யுவராஜ் சிங் ஆடியிருந்த ஆட்டம், கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது. இதனால், தன்னுடைய கடைசி கட்ட கிரிக்கெட் பயணத்தில் அதிக விமர்சனங்களையும் யுவராஜ் சிங் சம்பாதித்திருந்தார்.

many players dont get support like dhoni says yuvraj singh

அவுட் ஆகக் கூட நெனச்சேன்..

இது பற்றி தற்போது பேசியுள்ள யுவராஜ் சிங், "2014 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையின் போது, எனது நம்பிக்கை மிக குறைவாக இருந்தது. நான் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற சூழலும் இருந்தது. நான் அதனை காரணமாக சொல்லவில்லை. ஆனால், அணியின் ஆதரவு எனக்கு பெரிய அளவில் கிடைக்கவில்லை. இறுதி போட்டியில், என்னால் பந்துகளை அடித்து ஆட முடியவில்லை. ஆப் ஸ்பின்னர் ஓவர்களை அடிக்க நான் முயன்றும் டாட் பந்துகளாகவே அவை மாறியது. நான் அவுட் ஆகி விடலாம் என நினைத்தும், என்னால் முடியவில்லை.

அத்துடன் எனது கிரிக்கெட் பயணம் முடிந்து விட்டது என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அது தான் வாழ்க்கை. வெற்றிகளை நாம் ஏற்றுக் கொள்வது போல, தோல்விகளையும் நாம் ஏற்றுக் கொண்டு கடந்து செல்ல வேண்டும். ஒரு வீரருக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு கிடைத்தால், அவருக்கு பெரிய உதவியாக இருக்கும்.

many players dont get support like dhoni says yuvraj singh

தோனிக்கு கிடைச்ச ஆதரவு..

தோனியின் கிரிக்கெட் பயணம் முடியும் நேரத்தில், விராட் மற்றும் ரவி சாஸ்திரியின் ஆதரவு, அவருக்கு அதிகம் இருந்தது. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை வரை அவரைக் கொண்டு சேர்த்தது. ஆனால், தோனிக்கு கிடைத்தது போன்ற ஆதரவு அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஹர்பஜன் சிங், வீரேந்தர் சேவாக், விவிஎஸ் லக்ஷ்மண், கவுதம் கம்பீர் போன்ற வீரர்களுக்கு அந்த ஆதரவு கிடைக்கவில்லை. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்திய அணியின் நிலை மாறி போனது" என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

MSDHONI, YUVRAJ SINGH, RAVI SHASTRI, VIRAT KOHLI, யுவராஜ் சிங், தோனி

மற்ற செய்திகள்