VIDEO: ‘ஒத்தக் கையில் வேறலெவல் கேட்ச்’.. ஆரம்பமே பட்டைய கெளப்பிய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மனிஷ் பாண்டே ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து அசத்தினார்.

VIDEO: ‘ஒத்தக் கையில் வேறலெவல் கேட்ச்’.. ஆரம்பமே பட்டைய கெளப்பிய வீரர்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி இன்று (17.01.2020) ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.

இதில் ரோஹித் ஷர்மா 42 ரன்கள் அடித்து ஜாம்பாவின் ஓவரில் அவுட்டாகினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் தவான் 96 ரன்கள் அடித்து 4 ரன்னில் சதத்தை நழுவவிட்டார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி 78 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் விளாசினார். இதனால் 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 340 ரன்களை குவித்தது.

இந்த நிலையில் 341 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (15) அடித்த பந்தை ஒற்றைக் கையால் பிடித்து மனிஷ் பாண்டே அசத்தினார். முதல் ஒருநாள் போட்டியில் வார்னர், சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

CRICKET, BCCI, INDVAUS, MANISHPANDEY, WARNER, TEAMINDIA