ஐபிஎல் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு.. திடீர்னு விலகும் முக்கிய வீரர்?.. லக்னோ அணிக்கு ஆரம்பமே சோதனை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பெற்ற முக்கிய வீரர் காயத்தால் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு.. திடீர்னு விலகும் முக்கிய வீரர்?.. லக்னோ அணிக்கு ஆரம்பமே சோதனை..!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என 2 புதிய அணிகள் இணைந்துள்ளன. அதனால் இந்த ஆண்டு முதல் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன.

புதிதாக இரண்டு அணிகள் இணைந்ததால், அனைத்து அணியிலுள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தன. அதேபோல் புதிதாக இணைந்துள்ள லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும் வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் என பலரை ஏலத்தில் எடுத்தது. இந்த அணிக்கு இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் லக்னோ அணியில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் சரியாக பந்து வீச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக என சொல்லப்படுகிறது. அதனால் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வீரர்கள் தனிமைப்படுத்துதலை முடித்து விட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறனர். அதனால் புதிதாக ஒரு வீரரை அணியில் எடுத்தால், முதல் முக்கியமான போட்டிகளில் அவரால் பங்குபெற முடியாது சூழலில் ஏற்படும். இது லக்னோ அணிக்கு புதிய தலைவலியாக அமைத்துள்ளது.

Major blow for Lucknow, England pacer ruled out of IPL

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திடீரென மார்க் வுட் விலக உள்ளதாக கூறப்படுவது லக்னோ அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

KLRAHUL, LUCKNOWSUPERGIANTS, MARKWOOD, IPL2022

மற்ற செய்திகள்