அஸ்வின் மாதிரியே பந்துவீசிய இளம் வீரர்.. அஸ்வினை நேர்ல பார்த்ததும் செஞ்ச நெகிழ வைக்கும் காரியம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வினை சந்தித்திருக்கிறார் இளம் வீரர் மஹேஷ் பிதியா.

அஸ்வின் மாதிரியே பந்துவீசிய இளம் வீரர்.. அஸ்வினை நேர்ல பார்த்ததும் செஞ்ச நெகிழ வைக்கும் காரியம்..!

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிறந்தநாளில் மாணவிக்கு அடிச்ச ஜாக்பாட்.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரை சிறப்பாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரை ஆடுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில், முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 09 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது. அதன் பின்னர் டெல்லி, தரம்சாலா மற்றும் அகமதாபாத்தில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

Mahesh Pithiya met R Ashwin during Practice amid first test

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் உள்ளிட்ட வீரர்களின் சுழற்பந்து வீச்சு நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் அஸ்வின் போலவே பவுலிங் ஆக்ஷன் கொண்ட இந்திய இளம் வீரர் மகேஷ் பிதியாவை கொண்டு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Mahesh Pithiya met R Ashwin during Practice amid first test

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் அஸ்வினை சந்தித்திருக்கிறார் மஹேஷ் பிதியா. வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இவர்களுடைய சந்திப்பு நடைபெற்றது. அப்போது அஸ்வினின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார் மஹேஷ். இதனை சற்றும் எதிர்பாராத அஸ்வின் அவரை உயர்த்தி அணைத்துக்கொண்டதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். அப்போது, அங்கு வந்த விராட் கோலியும் கைகளை அசைத்து புன்னகை செய்திருக்கிறார்.

Mahesh Pithiya met R Ashwin during Practice amid first test

Images are subject to © copyright to their respective owners.

இதுபற்றி பேசியுள்ள மஹேஷ்," இது என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தினம். நான் யாரைப் பார்த்து வளர்ந்தேனோ அவரிடம் ஆசிர்வாதம் பெற்றிருக்கிறேன். அவர் என்னை கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இப்போது ரஞ்சி கிரிக்கெட்டில்  பரோடா அணிக்காக விளையாடி வருகிறேன். ஐபிஎல் குறித்து நான் இன்னும் யோசிக்கவே இல்லை. ஆஸ்திரேலிய அணியிடமிருந்து பந்துவீச அழைப்பு வந்ததும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன்" என்றார்.

Also Read | ”மேற்கத்திய கலாச்சாரத்தால் அழியும் நம் வேத மரபு".. பசு அரவணைப்பு தினத்தை அறிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை..!

CRICKET, ASHWIN, MAHESH PITHIYA

மற்ற செய்திகள்