Oh My Dog
Anantham Mobile

"ஒரு‌ சீனியர் பிளேயரிடம் இப்படியா பண்றது..?" பொல்லார்டை அவுட்டாக்கி விட்டு க்ருணால் பாண்ட்யா செஞ்ச சர்ச்சை காரியம்.?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டு விக்கெட்டை எடுத்ததும் லக்னோ அணி வீரர் க்ருணால் பாண்ட்யா செய்த செயல் நெட்டிசன்கள் மத்தியில் கண்டனங்களை பெற்று வருகிறது.

"ஒரு‌ சீனியர் பிளேயரிடம் இப்படியா பண்றது..?" பொல்லார்டை அவுட்டாக்கி விட்டு க்ருணால் பாண்ட்யா செஞ்ச சர்ச்சை காரியம்.?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணியை பொறுத்தவரை பொல்லார்டு மற்றும் ரிலே மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் 8-வது தோல்வியை மும்பை அணி சந்தித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 8 போட்டிகளில் ஒரு அணி தோல்வி பெறுவது இதுவே முதல்முறை.

இந்த நிலையில் இப்போட்டியில் லக்னோ அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யா செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதில் போட்டியின் 20-வது ஓவரை க்ருணால் பாண்ட்யா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு, தீபக் கூடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். உடனே அவரை கிண்டல் செய்யும் விதமாக க்ருணால் பாண்ட்யா, பொல்லார்டுக்கு கைகொடுக்க சென்றார். ஆனால் அவர் வேகமாக நடந்து சென்றதால், உடனே அவரது முதுகில் ஏறி தலையில் முத்தம் கொடுத்துவிட்டு க்ருணால் பாண்டியா சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கண்டனத்தை பெற்று வருகிறது.

க்ருணால் பாண்ட்யா முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். அப்போது பொல்லார்டுடன் நட்பாக பழகியதன் அடிப்படையில் க்ருணால் பாண்ட்யா இப்படி நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு வீரர் அவுட்டாகி சோகமாக வெளியேறும் போது இப்படி நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ரசிகர்கள் பலரும் க்ருணால் பாண்ட்யா மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

MIVLSG, IPL2022, KRUNALPANDYA, POLLARD

மற்ற செய்திகள்