சாலை விபத்தில் சிக்கிய லக்னோ அணி அதிகாரிகள்.. "அய்யய்யோ, என்ன ஆச்சு,. இப்போ எப்படி இருக்காங்க??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 42 ஆவது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்த நிலையில், லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது.

சாலை விபத்தில் சிக்கிய லக்னோ அணி அதிகாரிகள்.. "அய்யய்யோ, என்ன ஆச்சு,. இப்போ எப்படி இருக்காங்க??"

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக டி காக் 46 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில், வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 4 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருந்தார்.

புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, லக்னோ அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதிலிருந்து கடைசி வரை மீளாத பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், நடப்பு தொடரில் தங்களின் ஆறாவது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் 3 ஆவது இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளது.

lsg ceo and two others got injured in minor road accident

சாலை விபத்து..

இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்று, லக்னோ அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. புனேவில் நடந்த பஞ்சாப் Vs லக்னோ போட்டிக்காக, லக்னோ அணியின் சிஇஓ ரகு ஐயர், அவரது உதவியாளர் ரச்சிதா பெர்ரி மற்றும் கவுதம் கம்பீரின் மேனேஜர் கௌரவ் அரோரா ஆகியோர் காரில் மைதானத்திற்கு வந்துள்ளனர். அப்போது வரும் வழியில், ஒரு சிறிய சாலை விபத்தை மூவரும் சந்தித்துள்ளனர்.

தற்போதைய அப்டேட் என்ன?

தற்போது மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, லக்னோ அணி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, "லக்னோ அணியின் சிஇஓ ரகு ஐயர், அவரது உதவியாளர் ரச்சிதா பெர்ரி மற்றும் கவுதம் கம்பீரின் மேனேஜர் கவுரவ் அரோரா ஆகியோர், போட்டிக்காக மைதானம் வரும் வழியில் ஒரு சிறிய சாலை விபத்தில் சிக்கினர். அதிர்ஷ்டவசமாக மூவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளனர்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

lsg ceo and two others got injured in minor road accident

லக்னோ அணியின் முக்கிய பொறுப்புள்ள நபர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம், கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பரபரப்பை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்..https://behindwoods.com/bgm8 https://behindwoods.com/bgm8

LUCKNOW SUPER GIANTS, IPL 2022, LSG, ACCIDENT, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

மற்ற செய்திகள்