சிஎஸ்கே இல்லாம இன்னொரு டீமா??.. தீபக் சாஹர் கொடுத்த ரியாக்ஷன்.. உருக்கமான மெசேஜ்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் நேற்று பெங்களூருவில் உள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் ஏலத்தில் விடப்பட இருக்கிறார்கள். இந்நிலையில் முக்கிய வீரர்களை எந்த அணி எடுக்கிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் சுரேஷ் ரெய்னா போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டாதது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிஎஸ்கே இல்லாம இன்னொரு டீமா??.. தீபக் சாஹர் கொடுத்த ரியாக்ஷன்.. உருக்கமான மெசேஜ்!!

சிஎஸ்கே அணியில் சஹார்

ஏலத்தின் முதல் நாளான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் வேகப் பந்து வீச்சாளருமான தீபக் சஹாரை மீண்டும் அந்த அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது. தீபக் சஹாரை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும் 14 கோடி ருபாய்க்கு சிஎஸ்கேவே சஹாரை எடுத்தது .

Look Deepak message after he is being picked by asking again

மகிழ்ச்சி தெரிவித்த சஹார்

இந்நிலையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தன்னைத் தேர்ந்தெடுத்ததற்கு உருக்கமாக நன்றி தெரிவித்திருக்கிறார் தீபக் சஹார். இது குறித்து அதிகார டிவிட்டர் பக்கத்தில் சஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில்," என்மீது நம்பிக்கை வைத்து என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு மஹி பாய் (தோனி) மற்றும் அணி நிர்வாகத்திற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. மேலும், வேறு அணிகளுக்காக விளையாடுவதை நான் நினைத்து கூட பார்த்ததில்லை. ஏனெனில் சென்னைக்காக விளையாட மட்டுமே நான் விருப்பம் கொண்டிருந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Look Deepak message after he is being picked by asking again

அனல் பறந்த ஏலம்

நேற்று துவங்கிய ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் நட்சத்திர வீரர்களை எடுக்க, ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டன. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவந்த இஷான் கிஷனை எடுக்க கடும் போட்டி நிலவினாலும் 15.25 கோடி கொடுத்து மீண்டும் இஷானை அணியில் எடுத்தது மும்பை அணி நிர்வாகம். அதேபோல, ஷ்ரேயஸ் அய்யரை 12.25 கோடி கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது. ஆவேஷ் கானை 10 கோடியில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ்.

CSK, CRICKET, IPL, CSK, IPL, CRICKET, ஐபிஎல், சிஎஸ்கே, DEEPAKCHAHAR

மற்ற செய்திகள்