FIFA World Cup: தேம்பி தேம்பி அழுத மெஸ்ஸி மனைவி.. தேற்றிய மெஸ்ஸி! என்ன ஒரு மொமண்ட்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமெஸ்ஸி மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோ உலக கோப்பை கால்பந்து போட்டி முடிந்த பிறகு அழுத சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Also Read | "டிசம்பர் 18 மெஸ்ஸி கையில் கோப்பை இருக்கும்".. 7 வருடம் முன்பே கணித்த ரசிகர்..?? FIFA2022
மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது.
நேற்றைய இறுதிப்போட்டி உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்திருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அந்த அணியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. கத்தாரில் உள்ள லுஸைல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பாக்சில் அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் டி மரியா 2வது கோல் அடித்தார். இதன் மூலம் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இச்சூழலில் 81 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை அடித்தது. அந்த அணியின்
எம்பாப்பே அடித்த முதல் கோல் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது. அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்த கோலை எம்பாப்பே அடித்து அர்ஜென்டினா ரசிகர்களை உறைய வைத்தார்.
இதனால் 2-2 என போட்டி சமன் ஆனது. பின்னர் ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதியில் இரு அணிகளுமே மீண்டும் ஒவ்வொரு கோல் அடிக்க 3-3 என மீண்டும் போட்டி சமன் ஆனது. இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4- 2 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றது.
அர்ஜென்டினா உலக கோப்பை வென்ற பிறகு மெஸ்ஸி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மைதானத்தில் வலம் வந்தார். மேலும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது மனைவி அன்டொனெலா ரோகுஸ்ஸோ ஆனந்த கண்ணீரில் தேம்பி தேம்பி அழுதார். உடனிருந்த மெஸ்ஸி மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோவை தேற்றி முத்தமிட்டார். மேலும் உலக கோப்பையையும் தங்க பந்து & பதக்கத்தையும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அளித்தார். இந்த தருணங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
அன்டோனெலா ரோகுஸ்ஸோ & மெஸ்ஸி சிறு வயது முதல் நண்பர்கள் ஆவர். உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணி வெல்ல வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தவர்கள்.
மற்ற செய்திகள்