‘Bye பார்சிலோனா..!’.. 21 வருசம் விளையாடிய கிளப்பை விட்டு விலகும் மெஸ்ஸி.. இந்த திடீர் முடிவுக்கு ‘காரணம்’ இதுதானா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகின் முன்னணி கால்பந்து வீரர் மெஸ்ஸி எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி. இவர் ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியில் தனது 13 வயதில் இருந்து விளையாடி வருகிறார். தன் சொந்த நாடான அர்ஜெண்டினாவை விடவும், இந்த கிளப் அணிக்காவே அவர் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
புகழ்பெற்ற ஒரு கால்பந்து வீரரால் சொந்த நாட்டுக்கு ஒரு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் பல ஆண்டுகளாக மெஸ்ஸி மீது வைக்கப்பட்டு வந்தது. இதனை சமீபத்தில் நடந்து முடிந்த கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் பார்சிலோனா அணியை விட்டு மெஸ்ஸி விலகுவதாக அந்த அணி அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பார்சிலோனா அணியுடன் மெஸ்ஸி செய்துகொண்ட 21 ஆண்டுகால ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பார்சிலோனா அணி அவரை ஒப்பந்தம் செய்யும் என சொல்லப்பட்டது.
ஆனால் பார்சிலோனா கிளப்பின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் அவருக்கு 5% ஊதியம் மட்டுமே கொடுக்க முடியும் என சொல்லப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதுதொடர்பாக மெஸ்ஸியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அவர் பார்சிலோனா அணியை விட்டு வெளியேறுகிறார்.
36 வயதாகும் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக 21 ஆண்டுகள் விளையாடி 34 கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் அந்த அணிக்காக 672 கோல்களை அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப்புக்காக கால்பந்து ஜாம்பவான் பீலே அடித்த 643 கோல்களே சாதனையாக இருந்தது. இதனை மெஸ்ஸி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you, Leo. pic.twitter.com/cdS9xWe8Me
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021
LATEST NEWS | Leo #Messi will not continue with FC Barcelona
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021
மற்ற செய்திகள்