அப்போவே அப்படி... சிறு வயதில் மெஸ்ஸி கொடுத்த வைரல் பேட்டி.. தீயாய் பரவும் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மெஸ்ஸியின் தலைமையில் தற்போது நடந்து முடிந்துள்ள கால்பந்து உலக கோப்பைத் தொடரை அர்ஜென்டினா அணி 36 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி அசத்தி உள்ளது.

அப்போவே அப்படி... சிறு வயதில் மெஸ்ஸி கொடுத்த வைரல் பேட்டி.. தீயாய் பரவும் வீடியோ!!

Also Read | சண்டை போட்டு மெஸ்ஸிக்கு சான்ஸ் வாங்கிய பாட்டி.. "கோல் முடிச்சதும் வானத்தை பார்த்து கொண்டாடுறது இதுனால தான்".. சுவாரஸ்ய தகவல்

தனது அணியை தலைமை தாங்கியதுடன் நிறைய கோல்கள் அடித்து இறுதி போட்டியில் கோப்பையை கைப்பற்றவும் பெரிய பங்காற்றி இருந்தார் மெஸ்ஸி. அப்படிப்பட்ட மெஸ்ஸியின் கால்பந்து பயணத்திற்கு பின்னால் அவரது பாட்டியும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

தனது நான்கு வயதிலேயே கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு கொண்ட மெஸ்ஸி, குழந்தை பருவத்தில் தன்னுடைய சகோதரர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் அவர்களுடன் ஆடும் ஒரு சிறுவன் வராத காரணத்தினால் அவருக்கு பதிலாக மெஸ்ஸியை  விளையாட சேர்த்துக் கொள்ளுமாறு மெஸ்ஸியின் பாட்டி செலியா, அங்கிருந்த பயிற்சியாளரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் முதலில் மெஸ்ஸியின் உயரம் காரணமாக அவரை சேர்த்துக்கொள்ள பயிற்சியாளர் தயங்க, பாட்டியின் வற்புறுத்தலின் பெயரில் மெஸ்ஸியை அணியில் சேர்த்து கொண்டார்.

Lionel messi interview as kid gone viral after fifa world cup winners

மெஸ்ஸியின் முதல் கால்பந்து போட்டியாக அது அமைந்திருந்தது. சிறப்பாக ஆடி 2 கோல்களை மெஸ்ஸி அடித்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவரைக் கண்டு அனைவரும் மிரண்டு போயினர். கால்பந்து போட்டிகளில் தனது திறனை மெஸ்ஸி வளர்த்து கொண்டே இருந்தாலும், அவரது ஹார்மோன் குறைபாடு பிரச்சனை மறுபக்கம் அவரை வருத்திக் கொண்டே தான் இருந்தது. அவரது மருத்துவ உதவிக்காக அர்ஜென்டினாவில் உள்ள கால்பந்து கிளப்களில் மகனின் உதவிக்காக மெஸ்ஸியின் தந்தை ஏறி இறங்கினார். ஆனால், யாரும்  உதவி செய்ய முன்வராத சூழலில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கிளப்பி மெஸ்ஸியை அணியில் சேர்த்து அவருக்கான மருத்துவ உதவி செலவையும் பார்த்துக் கொண்டது. தினமும் ஹார்மோன் குறைபாடுக்கான ஊசியை செலுத்திக் கொண்டே கால்பந்து விளையாட்டிலும் தன்னை வளர்த்திக் கொண்டார் மெஸ்ஸி.

Lionel messi interview as kid gone viral after fifa world cup winners

உலக கோப்பை மட்டும் மெஸ்ஸி சாதனை பட்டியலில் மீதமிருந்ததையடுத்து அதனையும் தற்போது சொந்தமாக்கி உள்ளார். இந்த நிலையில், தற்போது மெஸ்ஸி அளித்த முதல் பேட்டி என கருதப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சிறு வயதில் நியுவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் என்ற அணியில் ஆடி இருந்த மெஸ்ஸி, அந்த அணிக்காக வெற்றி பெற்ற பின் பேட்டியில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி தற்போது வைரலாகி வரும் மெஸ்ஸியின் சிறு வயது வீடியோ படி, அந்த நெறியாளர் முதலில் பெயர் என்ன என கேட்கிறார். இதற்கு மெஸ்ஸி பதிலளித்த பிறகு, "நீங்கள் ஆட்ட நாயகனாக தேர்வாகி உள்ளீர்கள், அது உங்களுக்கு தெரியுமா?" என போட்டியாளர் கேட்கிறார். இதற்கு "இல்லை" என மெஸ்ஸி பதில் கூற, பின்னர் அவர் அடித்த கோல் பற்றிய கேள்வியும் முன் வைக்கப்பட்டிருந்தது.

Lionel messi interview as kid gone viral after fifa world cup winners

இதற்காக யார் உதவியுடன் கோல் அடித்தார் என பெயர் சொல்லி மெஸ்ஸி விளக்கம் கொடுத்திருந்தார். அபப்டி அவர் குறிப்பிட்ட வீரர்கள் நட்சத்திர கால்பந்து வீரர்களாகவும் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல, அந்த போட்டியில் மெஸ்ஸி 2 கோல்களை அடித்திருந்த நிலையில், தனது குடும்பத்தினருக்கும், தன்னை தெரிந்தவர்களுக்கும் அந்த கோலை அர்பணிப்பதாக மெஸ்ஸி தெரிவித்துளளார்.

 

Also Read | கையில் கோல்டன் பூட்.. பக்கத்துல உலக கோப்பை.. இரண்டே வார்த்தையில் எம்பாப்பே Viral ட்வீட்..

LIONEL MESSI, FIFA WORLD CUP WINNERS, LIONEL MESSI INTERVIEW AS KID

மற்ற செய்திகள்