பந்து எங்க?.. பரபரப்பா நடந்த மேட்ச்.. திடீர்னு ஏற்பட்ட கரண்ட் கட் .. குழப்பத்துல பிளேயர்ஸ் கொடுத்த ரியாக்ஷன்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபுகழ்பெற்ற FA Cup தொடரில் லிவர்பூல் vs வோல்வ்ஸ் போட்டியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதால் இரு அணி வீரர்களும் குழம்பிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பரபரப்பாக நடைபெற்று வரும் FA Cup தொடரில் லிவர்பூல் vs வோல்வ்ஸ் அணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பலப்பரீட்சை நடத்தின. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடிய லிவர்பூல் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களத்தில் இறங்கியது. அந்த அணியின் Harvey Elliott காட்டிய அதிரடியால் மேட்ச் பரபரப்பானது.
ஆட்டத்தின் முதல் பாதியில் Harvey Elliott கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், இறுதி வரையில் வோல்வ்ஸ் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இந்த போட்டியில் லிவர்பூல் அணி வெற்றிபெற்றிருந்தது. இப்போட்டியில் நடந்த இன்னொரு சம்பவமும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது போட்டியின் நடுவே திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
வோல்வ்ஸ் அணியின் Adama Traore பந்தை வேகமாக அடக்க முயற்சித்தார். அப்போது திடீரென மின்சாரம் கட் ஆனது. இதனையடுத்து மொத்த மைதானமும் இருளில் மூழ்கியது. இந்த போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் அப்போது கூச்சலிட்டு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இருப்பினும் சில வினாடிகளில் மின்சாரம் வந்தது.
ஆனால், பந்து பிளேயிங் ஏரியாவிற்கு வெளியே சென்றிருந்தது. இதனை கண்ட Adama Traore என்ன நடக்கிறது என்பது புரியாமல், மைதானத்தில் அமர்ந்தபடி சிரிக்க, சக போட்டியாளர்களும் குழப்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, வர்ணனை செய்துகொண்டிருந்தவர்கள் முன்னரும் இந்த பகுதியில் மின்சார துண்டிப்பு இருந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The lights went out just before Adama Traoré whipped in this cross against Liverpool.
The magic of the FA Cup 😅 pic.twitter.com/KV6tSzTHei
— ESPN FC (@ESPNFC) January 17, 2023
Also Read | கையிலே ஆகாசம்.. முதன்முதலில் மகள் ஓட்டிய விமானத்தில் பயணித்த அப்பா.. .. நெகிழ்ச்சி வீடியோ..!
மற்ற செய்திகள்