‘நீங்களும் இதை கத்துக்கோங்க குழந்தை’.. பும்ராவை மறைமுகமாக ‘கிண்டலடித்த’ முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் மறைமுகமாக சாடியுள்ளார்.

‘நீங்களும் இதை கத்துக்கோங்க குழந்தை’.. பும்ராவை மறைமுகமாக ‘கிண்டலடித்த’ முன்னாள் வீரர்..!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

Learn to take it kid, Dale Steyn to Bumrah after clash between Marco

இதனிடையே இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பேட்டிங் செய்தபோது, தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்கோ ஜான்சன் பந்து வீசினார். அப்போது அவர் வீசிய பவுன்சர் பும்ராவின் தோள்பட்டையில் பலமாக அடித்து சென்றது. ஆனால் அதை தூசி தட்டுவது போல தட்டி பும்ரா கிண்டல் செய்தார்.

Learn to take it kid, Dale Steyn to Bumrah after clash between Marco

இதனை அடுத்து மீண்டும் அதே போல பந்து வீசி விட்டு பும்ராவைப் பார்த்து மார்கோ ஜன்சன் ஏதோ கூறிவிட்டு சென்றார். இதனால் கடுப்பான பும்ரா, மார்க்கோ ஜான்சனை நோக்கி வேகமாகச் சென்றார். இதனால் மைதானத்தில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த அம்பயர் வேகமாக ஓடி வந்து இருவரையும் விலக்கி விட்டார். இந்த சம்பவத்தால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Learn to take it kid, Dale Steyn to Bumrah after clash between Marco

இந்த நிலையில் இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இதுபோன்ற பவுன்சர்களைதான் இங்கிலாந்து தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பும்ரா வீசினார். பந்தை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொள்ளுங்கள் குழந்தை’ என பும்ராவை மறைமுகமாக சாடினார்.

Learn to take it kid, Dale Steyn to Bumrah after clash between Marco

முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், பும்ராவை சீண்டினார். பதிலுக்கு பும்ராவும் தனது பவுன்சர்கள் மூலம் அவருக்கு பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BUMRAH, MARCOJANSEN, DALESTEYN, INDVSA

மற்ற செய்திகள்