Video: மறுபடியும் ‘அதே’ மாதிரியா.. கடைசி 1 பந்தில் 1 ரன் தேவை.. ஒரு நொடியில் போட்டியை மாற்றிய ‘அந்த’ வீரர் யார்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி இன்று (15.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 48 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் மயங்க அகர்வால் 45 ரன்களில் அவுட்டாக, அடுத்து கிறிஸ் கெயில் களமிறங்கினார்.
இந்த ஐபிஎல் சீசனில் கிறிஸ் கெய்ல் விளையாடும் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சற்று தடுமாறிய கெயில், சட்டென தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். விளையாடிய முதல் போட்டியிலேயே அரைசதம் (53 ரன்கள்- 5 சிக்ஸர், 1 பவுண்டரி) அடித்து அசத்தினார்.
இந்த நிலையில் 171 ரன்களை அடித்த பஞ்சாப் அணி கடைசி 2 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது சாஹல் வீசிய கடைசி ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் அருகில் அடித்துவிட்டு ரன் ஓடினார். இந்த சமயத்தில் கெயில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
#RCBvKXIP #Gayle run-out#KXIP #RCB pic.twitter.com/KB6q4kzoKX
— JRD Diwan (@Jayrocks3) October 15, 2020
இதனால் கடைசி ஒரு பந்தில் 1 ரன் அடித்தால் வெற்றி என்ற கட்டாயத்துக்கு பஞ்சாப் தள்ளப்பட்டது. அப்போது களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் சிக்ஸ் அடித்து அசத்தினார். இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் சீசனில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த இரண்டு வெற்றிகளும் பெங்களூரு அணிக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
#RCBvKXIP @nicholas_47 #theLAstAball
the last ball, incredible player, shot with full confidence.
great job . This is what we expect from every match, full of thrillers. pic.twitter.com/C7Gmw9Ebhz
— JRD Diwan (@Jayrocks3) October 15, 2020
#KingsXiPunjab win by 8 wickets against #RoyalChallengersBangalore what a match? #KLRahul #Gayle #RCBvKXIP #KXIPvRCB #IPL2020 #IPL #UAE #Sharja pic.twitter.com/ZoFC3fzwFw
— SitamMoharana_ANI (@SitamMoharana) October 15, 2020
This happiness in the squad is priceless 🤗🥺❣️
Aftee ups and down, #KXIP finally won the match 😅🥳🥺🔥👍👏❤️@nicholas_47, last ball par bacha lia bhai 🥺🌪️#KXIPvRCB #RCBvKXIP #SaddaPunjab #MayankAgarwal #ChrisGayle #KLRahul #Pooran pic.twitter.com/TK4npdUldz
— Archie Agarwal 🦋❤️🌪️💫🌈🥺 (@_rchie0425) October 15, 2020
முன்னதாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இதேபோல் ஒரு ரன்னில் தவறவிட்டு பஞ்சாப் அணி சூப்பர் ஓவருக்கு சென்றது. ஆனால் அப்போட்டியில் பஞ்சாப் தோல்வியை தழுவியது. அதேபோல் இன்றைய போட்டியில் ஒரு பந்துக்கு 1 ரன் என இருந்ததால் சூப்பர் ஓவருக்கு செல்லும் சூழ்நிலை உறுவானது. ஆனால் கடைசியாக களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை மாற்றினார்.
மற்ற செய்திகள்