VIDEO: விட்டா ரெண்டு பேரும் அடிச்சிப்பாங்க போலயே.. டி20 உலகக்கோப்பையை பரபரப்பாக்கிய மோதல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரரும், வங்கதேச வீரரும் மைதானத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: விட்டா ரெண்டு பேரும் அடிச்சிப்பாங்க போலயே.. டி20 உலகக்கோப்பையை பரபரப்பாக்கிய மோதல்..!

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரில் 15-வது லீக் போட்டியில் இலங்கை அணியும், வங்கதேச அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக முகமது நயிம் 62 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 57 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியைப் பொறுத்தவரை கருணாரத்னே, பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Lahiru Kumara involved in heated exchange with Liton Das

இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி, 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 80 ரன்களும், பானுகா ராஜபக்சே 53 ரன்களும் எடுத்தனர்.

Lahiru Kumara involved in heated exchange with Liton Das

இந்த நிலையில், இப்போட்டியில் இலங்கை பந்து வீச்சாளரும், வங்கதேச பேட்ஸ்மேனும் சண்டையிட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், போட்டியின் 6-வது ஓவரை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரா (Lahiru Kumara) வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் (Liton Das) பவுண்டரிக்கு விளாச முயன்றார்.

Lahiru Kumara involved in heated exchange with Liton Das

ஆனால் இலங்கை வீரர் ஷனகா கேட்ச் பிடித்து லிட்டன் தாஸை அவுட் செய்தார். அப்போது பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த லிட்டன் தாஸின் அருகில் சென்ற லஹிரு குமாரா ஏதோ சொல்ல, பதிலுக்கு லிட்டன் தாஸும் கோபமாக அவரை திட்டினார். உடனே அருகில் இருந்த மற்றொரு வங்கதேச பேட்ஸ்மேன் முகமது நயிம், லஹிரு குமாராவை சற்று கோபமாக தள்ளிவிட்டார்.

Lahiru Kumara involved in heated exchange with Liton Das

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. உடனே ஓடி வந்த அம்பயர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், மைதானத்துக்குள் வார்த்தை மோதலில் ஈடுபட்டதற்காக, இலங்கை வீரர் லஹிரு குமாராவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதமும், வங்கதேச வீரர் லிட்டன் தாஸுக்கு 15 சதவீத அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தரவரிசை மதிப்பீட்டில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்