"சேட்டை புடிச்ச ஆளுயா இந்த 'மனுஷன்'",,.. 'கிறிஸ்' கெயில் செய்த 'ரகளை'... வைரலாகும் அசத்தல் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவில் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

"சேட்டை புடிச்ச ஆளுயா இந்த 'மனுஷன்'",,.. 'கிறிஸ்' கெயில் செய்த 'ரகளை'... வைரலாகும் அசத்தல் 'வீடியோ'!!!

இதனையடுத்து, அனைத்து ஐ.பி.எல் அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற நிலையில் அங்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரும், பல ஐ.பி.எல் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான க்றிஸ் கெயில் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை அந்த அணி தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

பொதுவாக, போட்டி நடைபெறும் நேரத்தில் கிறிஸ் கெயில் மிகவும் ஜாலியாக இருக்கும் பழக்கத்தை கொண்டவர். மற்ற அணி வீரர்களுடன் குறும்பாக ஏதேனும் செயலில் ஈடுபடுவது, வீரர்களுடன் இணைந்து நடனமாடுவது என மிகவும் ஜாலியாக இருப்பவர். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெளியிட்டுள்ள வீடியோவிலும் பவுண்டரி லைன் அருகே நிற்கும் கிறிஸ் கெயில், லைனில் கால் வைத்துக் கொண்டு பந்தை பிடித்து, பிறகு மிகவும் கடினமாக அந்த கேட்சை எடுத்தது போல, பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே தட்டி விட்டு மீண்டும் அதனை கேட்ச் செய்கிறார்.

இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பேர் தற்போது அதனை பகிர்ந்து வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்