IPL MEGA AUCTION: குட்டி AB டிவில்லியர்சை ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ்! எத்தனை கோடிக்கு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுIPL 2022 மெகா ஏலத்தில் மிகவும் திறமையான இளம் தென்னாப்பிரிக்க பேட்டர் குட்டி டிவில்லியர்ஸ் டெவால்ட் ப்ரீவிஸ் நல்ல தொகைக்கு ஏலம் போனார்.
இவருக்கும் தென்னாப்பிரிக்க பேட்டிங் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸுக்கும் இடையே உள்ள ஒற்றுமையின் (ஜெஸ்ஸி நம்பர் 17 உட்பட) காரணமாக "பேபி ஏபி" என்று அழைக்கப்பட்ட ப்ரீவிஸ், சமீபத்தில் கரீபியனில் நடந்த ஐசிசி யு19 உலகக் கோப்பை 2022 இல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் ஜூனியர் உலககோப்பையில் அதிக ரன்கள் எடுத்த தவானின் சாதனையை முறியடித்தார். U19 உலகக் கோப்பையில், இவர் 84.33 சராசரியில் 506 ரன்கள் எடுத்தார்.
ப்ரீவிஸின் 506 ரன்கள், 2008 டி20 உலகக் கோப்பையில் 505 ரன்கள் எடுத்த இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தது.
தனது ஆறு ஆட்டங்களில் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்கள் அடித்ததுடன், மேலும் 28.57 சராசரியில் ஏழு விக்கெட்டுகளையும் எடுத்தார். இதன் மூலம் தொடர் நாயகன் விருதும் கிடைத்தது.
இவர் இந்தியா U19 க்கு எதிராக 65, உகாண்டாவிற்கு எதிராக 104, அயர்லாந்துக்கு எதிராக 96, இங்கிலாந்துக்கு எதிராக 97, மற்றும் 7வது-8வது இடத்திற்கான போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக 138 ரன்களை எடுத்தார்.
இவரை மும்பை இந்தியன்ஸ் (MI) INR 3 கோடிக்கு எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே ஏலப் போர் இருந்தது. இருப்பினும், இறுதியில் மும்பை இந்தியன்ஸ் டெவால்ட் ப்ரீவிஸுக்கு INR 3 கோடி ஏலத்தில் வென்றது.
மற்ற செய்திகள்