ஏலத்துக்கு நடுவில் சங்கக்காரா பாத்த வேலை.. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு காத்திருந்த ஆப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பத்து அணிகள் பங்கேற்ற ஐபிஎல் மெகா ஏலம், பெங்களூரில் கடந்த இரண்டு நாட்கள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

ஏலத்துக்கு நடுவில் சங்கக்காரா பாத்த வேலை.. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு காத்திருந்த ஆப்பு!

இதில், அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியிலும் தேர்வு செய்து கொண்டனர்.

அதே போல, மேலும் சில அணிகள், ஒரு வீரரை வாங்காத போதிலும், எதிரணியினர் நிச்சயம் எடுப்பார்கள் என்று இருக்கும் வீரர்களை எடுக்கப் போகும் நேரத்தில், வேண்டுமென்றே விலை ஏற்றி விட்ட சம்பவங்களும், கடந்த இரண்டு நாட்களில் அதிகம் அரங்கேறியிருந்தது.

மும்பை இந்தியன்ஸ்

ஆனால், ஐபிஎல் அணிகளில், மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் நாளில் இஷான் கிஷானை எடுக்க மட்டுமே கடுமையாக போட்டி போட்டது. மற்றபடி, பெரும்பாலான நேரங்களில் மிகவும் அமைதியாகவே இருந்தது. இதனால், ஏலத்தில் மும்பை அணியின் செயல்பாடு குறித்து  அதிக விமர்சனங்களும் எழுந்தது.

பிளான் போட்ட மும்பை

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் ஏலத்தில், அப்படியே தலைகீழாக மும்பை இந்தியன்ஸ் அணி செயல்பட்டிருந்தது. முதல் நாளில், பல முன்னணி வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தாத மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாம் நாளில் யாரை குறி வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியிருந்தது. மேலும், பேட்ஸ்மேன்களை மட்டுமே மும்பை அணி அதிகம் தேர்வு செய்திருந்தது.

கடும் போட்டி

தொடர்ந்து, அனைவரும் நினைத்தது போலவே, அபாயகரமான பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை எடுக்க, மும்பை அணி கோதாவில் இறங்கியது. முதலில் ராஜஸ்தான்  மற்றும் மும்பை அணிகள், ஆர்ச்சரை எடுக்க போட்டி போட்டது, இதன் பிறகு, ராஜஸ்தான் விலகிக் கொள்ள, அடுத்ததாக ஹைதராபாத் அணி, மும்பையுடன் மோதியது.

ஜோஃப்ரா ஆர்ச்சர்

இறுதியில், ஹைதராபாத் அணியும் ஒதுங்க, மும்பை அணி ஆர்ச்சரை, 8 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்தது. பும்ரா - ஆர்ச்சர் என உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரே அணியில் இருப்பதை, மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காயம் காரணமாக, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியுள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தான், மும்பை அணிக்காக களமிறங்குவார் என தெரிகிறது.

kumar sangakkara urges other teams to bid for mumbai player

சங்கக்காரா பார்த்த வேலை

இதனிடையே, மும்பை அணி ஜோஃப்ரா ஆர்ச்சரை ஏலத்தில் எடுக்க முயன்ற சமயத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா ஒரு செயலில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாக பரவி வருகிறது.

உசுப்பி விட்டார்

மும்பை அணி ஏலம் கேட்டுக் கொண்டிருந்த போது, மற்ற அணிகளை நோக்கி, நீங்களும் கேளுங்கள் என சங்கக்கரா கண்ணாலேயே சைகை காட்டுகிறார். ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டால், மும்பை அணியின் தொகை ஏறும். இன்னொரு பக்கம், ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை அணி வாங்க முடியாமல் கூட போகலாம். இதற்காக, மற்ற அணிகளையும் களத்தில் இறக்க, சங்கக்காரா உசுப்பி விட்டார்.

kumar sangakkara urges other teams to bid for mumbai player

ரசிகர்கள் கேள்வி

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வெளியாகி, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அணியின் விலையை அதிகரிக்க போட்டி போடாமல், மற்ற அணிகளை ஏன் உசுப்பி விட வேண்டும் என்றும் அதிகம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

KUMAR SANGAKKARA, MUMBAI INDIANS, IPL AUCTION 2022, மும்பை இந்தியன்ஸ், சங்கக்காரா

மற்ற செய்திகள்