பேட்டிங் பயிற்சியின் போது நடந்த சம்பவம்.. குல்தீப் யாதவ்க்கு காயம் .. BCCI வெளியிட்ட முக்கிய தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் இருந்து சுழல் பந்துவீச்சாளர் குல்தீப்யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

பேட்டிங் பயிற்சியின் போது நடந்த சம்பவம்.. குல்தீப் யாதவ்க்கு காயம் .. BCCI வெளியிட்ட முக்கிய தகவல்

Also Read | அதிவேகமாக பந்து வீசி அக்தர் & பிரெட் லீ சாதனையை முறியடித்த இந்திய வீரர்.. எவ்வளவு வேகம் தெரியுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஐந்து டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. 15ல் இந்தியா ஒன்பது முறையும், தென்னாப்பிரிக்கா 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது.  தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. டெல்லியில்  நடைபெறும் Paytm T20I டிராபி - 1st T20I போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக உள்ளது. ஜூன் 9 ஆம் தேதி புது தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Kuldeep Yadav Ruled out from India South Africa T20 Series

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடருக்கு முன்னதாக இந்திய தேசிய கிரிக்கெட் அணி கேப்டன் கே.எல்.ராகுல்  தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இந்திய தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ரோஹித் சர்மாவுடன், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கும் தென்னாப்பிரிக்கா தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Kuldeep Yadav Ruled out from India South Africa T20 Series

இந்நிலையில், "நேற்று மாலை நெட்ஸில் பேட்டிங் செய்யும் போது குல்தீப் யாதவ் வலது கையில் அடிபட்டதால் டி20 தொடரில் இருந்து விலகுகிறார்" என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. குல்தீப் ஐபிஎல் 2022 இல் தனது புதிய அணியான டெல்லி கேபிடல்ஸிற்காக 21 விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் நான்கு முறை ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது குல்தீப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Kuldeep Yadav Ruled out from India South Africa T20 Series

டி20 போட்டிகள், டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியம், கட்டாக் பாராபதி ஸ்டேடியம், விசாகபட்டினம் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஏசிஏ விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியம், ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் மற்றும் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

Also Read | இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட K L ராகுல்.. புதிய கேப்டனான ரிசப் பண்ட்! வெளியான பிண்ணனி தகவல்

CRICKET, KULDEEP YADAV, INDIA SOUTH AFRICA T20 SERIES, குல்தீப்யாதவ், டி20 சர்வதேசப் போட்டி

மற்ற செய்திகள்