"சத்தியமா வார்த்த ஒன்னும் வரல..." உடைந்து அழுத 'இந்திய' வீரர்.. "பாக்குறவங்க கண்ணே 'கலங்கி' போச்சு'ங்க.." மனதை நொறுக்கும் 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான முதல் ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது.

"சத்தியமா வார்த்த ஒன்னும் வரல..." உடைந்து அழுத 'இந்திய' வீரர்.. "பாக்குறவங்க கண்ணே 'கலங்கி' போச்சு'ங்க.." மனதை நொறுக்கும் 'வீடியோ'!!

தொடக்கத்தில் இந்திய அணி சற்று நிதானமாக ஆடினாலும், ஒரு பாதிக்கு பிறகு ஆட்டம் வேகம் எடுத்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் நூலிழையில் சதத்தை தவற விட்டு, 98 ரன்களில் அவுட்டானார். அதன் பிறகு, இறுதியில் கைகோர்த்த ராகுல் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர், அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

கடைசி 10 ஓவர்களில், இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில், தான் அறிமுகமான முதல் ஒரு நாள் போட்டியிலேயே, அரை சதமடித்து அசத்தினார் க்ருணால் பாண்டியா. அது மட்டுமில்லாமல், முதல் ஒரு நாள் போட்டியில், அதிவேகமாக அரை சதமடித்த (26 பந்துகள்) சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் பேட்டிங் முடிவடைந்த பிறகு பேச முயன்ற க்ருணால் பாண்டியாவால், வாய் திறந்து ஒரு வார்த்தை கூட சரிவர பேச முடியவில்லை.

 

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம், க்ருணால் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் தந்தை, மாரடைப்பால் உயிரிழந்தார். இன்றைய ஒரு நாள் போட்டிக்கு முன்னர் அறிமுகமாகும் போதும், தனது சகோதரர் ஹர்திக்கிடம் இருந்து தொப்பியை பெற்றுக் கொண்ட க்ருணால் பாண்டியா, தந்தையை நினைத்து கண் கலங்கி, தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்துவது போல தொப்பியை உயர்த்திக் காட்டினார். தொடர்ந்து, பேட்டிங்கிலும் அப்படி ஒரு சிறப்பான இன்னிங்ஸை ஆடி, தந்தைக்கு அதனையும் சமர்ப்பணம் செய்தார்.

 

இப்படி ஒரு செயலை செய்த போது, அதனைக் காண தந்தை இல்லை என்பதை எண்ணிய க்ருணால் பாண்டியாவால், ஒரு வார்த்தையை கூட சொல்ல முடியாமல் அழுது கொண்டே நின்றது, வீடியோ பார்க்கும் அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளது.

 

அதே போல, தனது பேட்டிங்கிற்கு பிறகு, சகோதரர் ஹர்திக் பாண்டியாவை கட்டித் தழுவி, க்ருணால் அழுததும் அனைவரை கலங்கடித்துள்ளது.

மற்ற செய்திகள்