தம்பியின் விக்கெட்டை தட்டி தூக்கிட்டு.. க்ருனால் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன்.. வைரலான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு அவரது மூத்த சகோதரர் க்ருனால் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் தான் இப்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஐபிஎல்
உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடர் கடந்தவாரம் துவங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களம் கண்டன.
இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் புதிதாக இணைந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் முக்கிய வீரர்களை இந்த இரு அணிகளும் போட்டிபோட்டுக்கொண்டு எடுத்தன. அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணி வாங்கியது.
அதேபோல, அவரது மூத்த சகோதரரான க்ருனால் பாண்டியாவை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முந்தைய ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் Vs லக்னோ
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதில், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் டாசில் வென்று பவுலிங் தேர்வு செய்தது குஜராத் அணி. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து குஜராத் அணி பேட்டிங்கை தொடர்ந்தது.
விக்கெட்
குஜராத் அணியின் பேட்டிங்கின் போது துவக்க ஆட்டக்காரரான கில் டக்கில் வெளியேற அடுத்துவந்த விஜய் சங்கரும் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதன் காரணமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தார். மேத்திவ் வேட் -உடன் கூட்டணி அமைத்து அணியை ஹர்திக் மீட்க போராடினார்.
அப்போது, 11 வது ஓவரை வீச வந்தார் லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ஹர்திக் பாண்டியாவின் சகோதரருமான க்ருனால் பாண்டியா. அதிரடி ஆட்டக்காரரான ஹர்திக், க்ருனால் பாண்டியாவின் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், அடுத்த பந்திலேயே மனிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அப்போது, க்ருனால் விக்கெட் வீழ்த்தியை கொண்டாடாமல் வாயில் கைவைத்தபடி நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Hardik Out On Krunal Pandya Ball.. See the reaction of hardik wife’s after dismissal on youngest Brother ball 🏏👌😊 #krunal #HardikPandya #GujaratTitans #GTvsLSG #LucknowSuperGiants pic.twitter.com/LKXAsCPJqM
— Ankit Kunwar (@TheAnkitKunwar) March 28, 2022
மற்ற செய்திகள்