'மேட்ச்' ஆரம்பிப்பதற்கு முன்னர்... கண்கலங்கிய 'சகோதரர்'... தேற்றிய 'ஹர்திக் பாண்டியா'... நெகிழ வைக்கும் காரணம்.. 'வைரல்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான முதல் ஒரு நாள் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

'மேட்ச்' ஆரம்பிப்பதற்கு முன்னர்... கண்கலங்கிய 'சகோதரர்'... தேற்றிய 'ஹர்திக் பாண்டியா'... நெகிழ வைக்கும் காரணம்.. 'வைரல்' வீடியோ!!

முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றிருத்த டெஸ்ட் மற்றும் டி 20 தொடரை, இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இதனிடையே, இந்திய அணியில் இரண்டு வீரர்கள் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இன்று அறிமுகமாகியுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில், 6 போட்டிகளில் ஆடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா (Prasidh Krishna), இன்று இந்திய அணிக்காக களம் காண்கிறார்.

மேலும், ஆல் ரவுண்டர் க்ருணால் பாண்டியா (Krunal Pandya), ஏற்கனவே டி 20 போட்டியில் இந்திய அணிக்காக ஆடினாலும், ஒரு நாள் தொடருக்காக இந்திய அணியில் இன்று முதல் முறையாக களமிறங்கவுள்ளார். இன்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், பிரஷித் கிருஷ்ணா மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர், முதல் ஒரு நாள் போட்டிக்கான தொப்பியை பெற்றுக் கொண்டனர். பயிற்சியாளர்கள் மற்றும் அணி வீரர்கள், இருவருக்கும் பாராட்டு தெரிவித்து வரவேற்றனர்.

 

இதில், தனது இளைய சகோதரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து தொப்பியை பெற்றுக் கொண்ட க்ருணால் பாண்டியா, அதன் பிறகு உணர்ச்சிவசப்பட்டார். தனது தொப்பியை வானத்தை நோக்கிக் காட்டி, தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் செய்து காட்டினார்.

கடந்த ஜனவரி மாதம் க்ருணால் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் தந்தை மாரடைப்பு மூலம் உயிரிழந்தார். இதனை நினைத்து கண் கலங்கிய க்ருணால் பாண்டியா, இறுதியில் சகோதரர் கட்டிப் பிடித்துக் கொண்டே தன்னை தேற்றிக் கொண்டார்.

மிகவும் நெகிழ்ச்சிகாரமான இந்த வீடியோவை, தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்