கொல்கத்தா அணிக்கு இனிமே இவர்தான் கேப்டன்.. அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் கிரிக்கெட்டின் 15-வது தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெற்றது. 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் பங்கேற்க 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1,214 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில் இருந்து 590 வீரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதிப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
ஸ்ரேயாஸ் அய்யர்
ஐபிஎல் ஏலத்தில் முன்னாள் டெல்லி அணி வீரரான ஸ்ரேயாஸ் அய்யரை கைப்பற்ற ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டன. இருப்பினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணியின் கேப்டனான செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான வெங்கி மைசூர்," ஸ்ரேயாஸ் அய்யரை ஏலத்தில் எடுக்க ஆரம்பம் முதலே நாங்கள் ஆர்வம் காட்டினோம். அவர் கொல்கத்தா அணியை வழிநடத்துவார். அவர் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாது மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட வீரர். அவர் மொத்த நிர்வாகத்தையும் தனது திறமையால் கவர்ந்திருக்கிறார்" என்றார்.
சக்ஸஸ் கேப்டன்
முன்னதாக 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் அந்த அணியை இரண்டு முறை பிளே ஆப்-க்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். இவரது தலைமையில் கடந்த 2019 ஆம் ஆண்டு எலிமினேட்டர் ரவுண்ட் வரையிலும் 2020 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரையிலும் அந்த அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் 41 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் ஸ்ரேயாஸ். அதில் 21 போட்டிகளில் அந்த அணி வெற்றியையும் 18 போட்டிகளில் தோல்வியையும் 2 போட்டிகளில் முடிவு எட்டப்படாமலும் இருந்திருக்கின்றன. கொல்கத்தா அணியின் பேட்டிங் கோச்சாக முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லமும் பவுலிங் கோச்சாக பரத் அருணும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த காம்போ கொல்கத்தாவிற்கு வெற்றிகளை அள்ளித்தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
லைக் போடுபவர்களின் விவரங்களை சேகரித்த விவகாரத்தில் பேஸ்புக் கட்ட வேண்டிய அபராதம் எவ்வளவு தெரியுமா?
மற்ற செய்திகள்