"இந்த தடவ 'கோலி' போட்டு வெச்சுருக்குற 'ஸ்கெட்சே' வேற.. என்ன நடக்கப் போகுதுன்னு மட்டும் பாருங்க.." எகிறும் 'எதிர்பார்ப்பு'.. பட்டையை கிளப்புமா 'இந்திய' அணி??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இந்த தடவ 'கோலி' போட்டு வெச்சுருக்குற 'ஸ்கெட்சே' வேற.. என்ன நடக்கப் போகுதுன்னு மட்டும் பாருங்க.." எகிறும் 'எதிர்பார்ப்பு'.. பட்டையை கிளப்புமா 'இந்திய' அணி??

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதற்காக இந்திய கிரிக்கெட் அணி, நேற்று இங்கிலாந்து சென்றடைந்தது. அங்கே சில தினங்களுக்கு, இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதன் பிறகே பயிற்சியை தொடங்கவுள்ளது.

kohli wants to show why indian team is no.1 says Reetinder Singh

இந்த போட்டிக்காக, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சம பலத்துடன் விளங்கும் நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற நிச்சயம் இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால், ஐந்து நாட்களும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ரீதிந்தர் சிங் சோதி (Reetinder Singh Sodhi), இந்திய அணி குறித்தும், கேப்டன் கோலி குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

kohli wants to show why indian team is no.1 says Reetinder Singh

'அனைவரும் கோலியை கோபமான இளைஞர் என்று கூறுகின்றனர். ஆனால், நான் அதில் ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்துக் கொள்ள நினைக்கிறன். கோபமான, பாசிட்டிவிட்டி எண்ணம் கொண்ட இளைஞர் என்பது தான் அது. ஏனென்றால், இந்திய அணி ஏன் நம்பர் 1 அணியாக இருக்கிறது என்பதை இந்த உலகுக்கு காட்ட வேண்டும் என விராட் கோலி விரும்புகிறார்.

kohli wants to show why indian team is no.1 says Reetinder Singh

நான் சொன்ன பாசிட்டிவிட்டியை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணிக்குள் உருவாக்கி வைத்துள்ளார். இந்திய அணியின் செயல்திறன், தற்போது மிகவும் பேசப்பட்டு வருகிறது. இந்திய அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும், உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களும் இருப்பதால், நாம் வலிமையாக உள்ளோம்.

kohli wants to show why indian team is no.1 says Reetinder Singh

போட்டிக்காக, இங்கிலாந்து கிளம்புவதற்கு முன்னர், எந்த விதத்திலும் நியூசிலாந்து அணிக்கு நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்ற எண்ணத்தில் தான் விமானம் ஏறுவோம் என்றும், இல்லையெனில் விமானத்தில் ஏற வேண்டாம் என்றும் தனது அணியினரிடம் கோலி தெரிவித்திருந்தார். இந்த நேரத்தில், விராட் கோலி எவ்வளவு கவனத்துடன் உள்ளார் என்பதைத் தான் இது காட்டுகிறது.

kohli wants to show why indian team is no.1 says Reetinder Singh

இதனால், நியூசிலாந்து அணி கவனத்துடன் ஆட வேண்டியிருக்கும். இது மிகவும் பெரிய போட்டி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி. எனவே எந்த அணியால் நெருக்கடியை தாங்கிக் கொண்டு ஆட முடியுமோ, அந்த அணி வெற்றி பெற தான் அதிக வாய்ப்புள்ளது. மேலும், இந்திய அணி இதற்காக முழுவதும் தயாராக உள்ளது' என ரீதிந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்