"எல்லாம் ஓகே தான்... ஆனா, இத மட்டும் எப்படி ஏத்துக்க முடியும்??.." தொடர் வெற்றிக்கு பின் 'கோலி' சொன்ன விஷயம்.. 'பரபரப்பு' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி, 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

"எல்லாம் ஓகே தான்... ஆனா, இத மட்டும் எப்படி ஏத்துக்க முடியும்??.." தொடர் வெற்றிக்கு பின் 'கோலி' சொன்ன விஷயம்.. 'பரபரப்பு' சம்பவம்!!

ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் டி 20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி, இந்திய அணி பட்டையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஒரு நாள் தொடருக்கான தொடர் நாயகன் விருதை, இங்கிலாந்து  வீரர் ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), ஆட்ட நாயகன் விருதை மற்றொரு இங்கிலாந்து வீரர் சாம் குர்ரானும் (Sam Curran) வென்றனர்.

இதனையடுத்து, போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி (Virat Kohli), 'இந்திய வீரர் ஷர்துல் தாக்கூருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்படாததும், புவனேஷ்வர் குமாருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்படாததும் ஆச்சரியமாக இருக்கிறது.

இது போன்ற பாதகமான சூழ்நிலைகளில், அவர்கள் சிறப்பாக பந்து வீசியதற்கு மொத்த பெருமையும் அவர்களையே சாரும்' என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூட, 'புவனேஷ்வர் குமார் எப்படி தொடர் நாயகனாக அறிவிக்கப்படவில்லை?' என கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார்.

அதே போல, இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூட, புவனேஷ்வர் குமாருக்கு தான் தொடர் நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும் என குறிப்பிட்டு டீவீட் செய்துள்ளார்.

 

முன்னதாக, இறுதி ஒரு நாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்ற போதும், தனி ஆளாக கடைசி வரை களத்தில் நின்று போராடிய இங்கிலாந்து வீரர் சாம் குர்ரானுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்