மேட்ச்ல ‘ஹைலைட்டே’ இந்த இடம்தான்.. ‘தல’ தோனியா?.. ‘கிங்’ கோலியா?.. பரபரக்க வைத்த நொடிகள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.

மேட்ச்ல ‘ஹைலைட்டே’ இந்த இடம்தான்.. ‘தல’ தோனியா?.. ‘கிங்’ கோலியா?.. பரபரக்க வைத்த நொடிகள்..!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று (10.10.2020) துபாய் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இதில் ஆரோன் ஃபிஞ்ச் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

Kohli shows his fitness level after escape from Dhoni's run out

இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதில் படிக்கல் 33 ரன்னில் அவுட்டாகினார். ஆனால் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 90 ரன்கள் விளாசி அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது.

Kohli shows his fitness level after escape from Dhoni's run out

இந்தநிலையில் இப்போட்டியில் விராட் கோலியை தோனி ரன் அவுட் செய்ய முயன்றார். ஆனால் அதற்குள் கோலி க்ரீஸுக்கு வந்துவிட்டார். இதனை தோனியின் ஸ்டம்பிங் வேகத்துடன் ரசிகர்கள் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இன்னிங்ஸ்ஸின் கடைசி ஓவரில் முதல் பந்தை ஏபி டிவில்லியர்ஸ் போல அடித்து கோலி பவுண்டரிக்கு விளாசினார். இதனை அடுத்து தொடர்ந்து நான்கு பந்துகளிலும் விராட் கோலி 2 ரன்கள் ஓடினார். 3-வது ஓவரில் களமிறங்கிய கோலி தொடர்ந்து 17 ஓவர்கள் பேட்டிங் செய்தும் சோர்வடையாமல், கடைசி ஓவரிலும் நான்கு பந்துகளில் தொடர்ந்து 2 ரன்கள் ஓடியது அவரது ஃபிட்னஸை காட்டுகிறது என விராட் கோலியின் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்