VIDEO: ‘அய்யோ.. என்னா அடி’.. இளம் தமிழக வீரர் மீது பலமாக மோதி கீழே விழுந்த கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போதும் தமிழக வீரர் மீது விராட் கோலி மோதி கீழே விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

VIDEO: ‘அய்யோ.. என்னா அடி’.. இளம் தமிழக வீரர் மீது பலமாக மோதி கீழே விழுந்த கோலி..!

Also Read | என்னய்யா இது .. ‘பந்து ஸ்டம்பில் பட்டும் இப்படி ஆகிடுச்சு...’.. எஸ்கேப் ஆன மேக்ஸ்வெல்.. நொந்துபோன ரஷித் கான்..!

ஐபிஎல் தொடரில் 67-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 62 ரன்களும், டேவிட் மில்லர் 34 ரன்களும், சாஹா 31 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியை பொறுத்தவரை ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. அதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்களும், கேப்டன் டு பிளசிஸ் 44 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும் எடுத்தனர். இதில் விராட் கோலி ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போட்டியின் 9-வது அவரை தமிழக இளம் சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் வீசினார். அந்த ஓவரில் ரன் எடுக்க வேகமாக ஓடிய விராட் கோலி எதிர்பாராத விதமாக சாய் கிஷோரின் மீது பலமாக மோதினார். அதனால் இருவரும் கீழே விழுந்தனர். இதனை அடுத்து எழுந்த விராட் கோலி, சாய் கிஷோரிடம் அடி ஏதும் பட்டதா? என விசாரித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

Nenjuku Needhi Home
CRICKET, VIRAT KOHLI, RCB, SAI KISHORE, GT, RCB VS GT, IPL 2022

மற்ற செய்திகள்