'உலகக்கோப்பை போட்டியில் இவருக்கு பதில் இவரை எடுத்தது ஏன்?'.. உண்மையை உடைத்துச் சொன்ன கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஜூரம் முடிந்து உலகக் கோப்பை ஜூரம் தொடங்கிய குறுகிய நாட்களிலேயே இந்திய அணியின் உலகக் கோப்பை தேர்வு குறித்த விவாதங்கள் எழுந்து வருகின்றன.

'உலகக்கோப்பை போட்டியில் இவருக்கு பதில் இவரை எடுத்தது ஏன்?'.. உண்மையை உடைத்துச் சொன்ன கோலி!

இதில் அம்பதி ராயுடு மற்றும் ரிஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் ஷங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களை பலரும் ஆஃப் தி ரெக்கார்டாக பேசிக்கொள்ளத் தொடங்கினர். இதுகுறித்து தேர்வுக்குழு முன்னமே விளக்கமளித்திருந்தாலும், இது குறித்த தொடர் சர்ச்சைகள் எழவே, இதுகுறித்து கோலி கருத்து தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

அதன்படி, ‘அனுபவம் வாய்ந்த வீரரான தினேஷ் அழுத்தம் நிறைந்த சூழலில் கூட நிதானமாய் முடிவெடுக்கக் கூடியவர் என்பதை அறிந்தே தேர்வுக்குழுவினர் அவர் மீதுள்ள நம்பிக்கையின்பால் அவரை தேர்வு செய்தது, அதோடு உலகக் கோப்பை போட்டியின்போது நம்மையும் மீறி கடவுளின் பேரால் ஒருவேளை தல தோனியால் விக்கெட் கீப்பிங்கில் நிற்க முடியாமல் போனால் தினேஷ் கார்த்திக் அந்த இடத்தை மதிப்புடன் காப்பாற்றுவார்’ என்று கோலி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசியவர், தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த ஃபினிஷர் என்றும், அவருடைய பாசிட்டிவான பாய்ண்ட்கள்தான், அவரைத் தேர்வு செய்வதற்கான முழுமுதற்காரணம் என்றும் தெரிவித்துள்ளார். கோலியின் இந்த பேச்சு வைரலாகியுள்ளதோடும் தினேஷ் கார்த்திக் மீது ஒரு நன்மதிப்பை உருவாக்கியுள்ளது.

VIRATKOHLI, DINESHKARTHIK, WORLDCUP2019