'இந்தியா புறப்பட்ட கேப்டன் கோலி’... ‘கிளம்புவதற்கு முன் சொன்ன வார்த்தை’... ‘வெளியான தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டியில் மட்டும பங்கேற்ற கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அமீரகத்தில் முடிந்ததும் அங்கிருந்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயம் மேற்கொண்டது. இதில் ஒருநாள் போட்டியில் 1-2 என்ற கணக்கில் தோல்வியுற்ற நிலையில், 2-1 என்ற கணக்கில் டி20 போட்டியில் வென்றது.
இதையடுத்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 17-ம் தேதி துவங்கியது. பகலிரவு போட்டியாக இந்தப் போட்டியில் இந்திய அணி, 2-வது இன்னிங்ஸ்சில் 36 ரன்களுக்கு அவிட்டாகி தோல்வியுற்று மோசமான சாதனை புரிந்தது.
இரண்டாவது போட்டி வரும் 26-ம் தேதி துவங்க உள்ள நிலையில், தனக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளதால், அணியிலிருந்து விலகி, இந்தியாவுக்கு இன்று விமானம் பிடித்தார் விராட் கோலி. இந்நிலையில், விராட் கோலி புறப்படுவதற்கு முன் இந்திய அணி வீரர்களிடம் அடுத்து வரும் 3 போட்டிகள் குறித்து பேசிவிட்டு கிளம்பியுள்ளார்.
அணி வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அவர்களை சந்தித்து பேசிய விராட் கோலி, ‘நம்பிக்கையை இழக்காதீர்கள். அதுவே உங்களை பாசிட்டிவாக செயல்பட வைக்கும்’ என சக வீரர்களுக்கு கோலி அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்களது தீவிரத்தை மைதானத்தில் வெளிப்படுத்தவும் அவர் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
குறைந்த ஓவர்களின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது குவாரன்டைனில் உள்ள நிலையில், அவர் 3-வது போட்டியில் தான் பங்கேற்பார். அடுத்த 3 போட்டிகளிலும் அஜிங்க்யா ரஹானே கேப்டனாக வழி நடத்துவார்.
மற்ற செய்திகள்