எல்லாமே பொய்... அவர்கள்தான் விளக்க வேண்டும்... ஓப்பனாக உடைத்த கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டதில் இருந்து பல சர்ச்சைகளும் புரளிகளும் எழுந்து வருகின்றன. பிசிசிஐ, ரோகித், கோலி என சர்ச்சைகள் நீண்ட தொடர் கதையாகி வருகின்றன. இந்த சூழலில் தான் தற்போது இந்திய அணியிலும் தன்னைச் சுற்றியும் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என வெளிப்படையாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

எல்லாமே பொய்... அவர்கள்தான் விளக்க வேண்டும்... ஓப்பனாக உடைத்த கோலி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து புதிய கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ரோகித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த சூழலில் திடீரென இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ திடீரென அறிவித்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக மறுத்ததாக கூறப்படுகிறது. அப்படி உள்ள சூழலில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இன்றைய ப்ரெஸ் மீட்-ல் கூட தான் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் ஆக தொடர விரும்பியதாக கோலி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ‘டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு தனித்தனி கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது என்று தேர்வுக்குழு முடிவு எடுத்தது. அதனால்தான் டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக வேண்டாம் என்று வலியுறுத்தினோம். ஆனால் அவர் அதை கேட்காததால், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனக் கூறினார்.

சமீபத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து சவுரவ் கங்குலி பேசிய போது, "ரோகித் சர்மா மீது முழு நம்பிக்கை இருந்ததால்தான் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இது சாதாரண விஷயம் இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆசியா கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா தான் வழிநடத்தினார். அந்த தொடரில் விராட் கோலி இல்லாமலே கோப்பையை வென்று கொடுத்தார்" என்றார்.

விராட் கோலி இல்லாமலும் விளையாட முடியும் என சவுரவ் கங்குலி மறைமுகமாக கூறுவதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுவும் தற்போது சர்ச்சையாகி நிற்கிறது. அப்படி கோலி-க்கும் கங்குலி-க்கும் என்ன பிரச்னைதான் நடக்கிறது? ஏன் கோலி-க்கு இவ்வளவு அவமரியாதை? என கிரிக்கெட் ரசிகர்களும் கோலி ரசிகர்களும் சமுக வலைதளங்களில் பொங்கி வருகின்றனர். கோலி இன்று பல கருத்துகளை வெளிப்படையாக பேசிய பின்னர் பிசிசிஐ சார்பில் என்ன விளக்கங்கள் கொடுக்கப் போகிறார்கள் என்பது பிசிசிஐ-க்கே வெளிச்சம்.

VIRATKOHLI, KOHLI PRESS MEET, KOHLI ON CAPTAINCY, கோலி ப்ரஸ் மீட், விராட் கோலி, கேப்டன்ஸி சர்ச்சைகள்

மற்ற செய்திகள்