ரோஹித்தும், நானும் தான் கெத்து பார்ட்னர்ஸ்... நாங்க ஆஸி.க்கு பயத்த காட்டினோம்... விராத்கோலி பெருமிதம்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரோகித் சர்மாவும், நானும் அனுபவம் வாய்ந்தவர்கள், நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது பலனைத் தந்தது என கேப்டன் விராத் கோலி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 128 பந்தில் 8 பவுண்டரி, 6 சிக்சர் என 119 ரன்கள் குவித்தார். அவரது ஆட்டம் அழகாக இருந்தது என்று விராட்கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி கடந்த மார்ச் மாதம் இந்திய மண்ணில் ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது அதற்கு இந்திய அணி தொடரை வென்று சரியான பதிலடி கொடுத்தது.
இந்த வெற்றி குறித்து குறிப்பிட்ட கேப்டன் விராட்கோலி, இந்திய அணியின் தொடக்கம் நன்றாக அமைந்ததாகக் குறிப்பிட்டார். ராகுலும், ரோஹித்தும் திறமை வாய்ந்தவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், ராகுல் ஆட்டம் இழந்த பிறகு சூழ்நிலைக்கு தகுந்தவாறு ரோஹித் விளையாடியதாகத் தெரிவித்தார்.
ரோகித் சர்மாவும் நானும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும், நிலைத்து நின்று பார்ட்னர் ஷிப் அமைப்பது முக்கியம் என்று நாங்கள் பேசிக் கொண்டோம் என்றும் கோலி குறிப்பிட்டார்.
ரோகித் சர்மாவின் ஆட்டம் அழகாக இருந்தது. நான் களம் வருவதற்கு முன்பே அவர் ஆட்டத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் என்றும் புகழாரம் சூட்டினார்.