"ப்பா, இப்டி ஒரு பிளேயர என் 'கிரிக்கெட்' வாழ்க்கை'ல நான் பாத்ததே இல்ல.. வேற 'லெவல்'ங்க அவரு.." 'இந்திய' வீரரால் மிரண்டு போன 'சைமன் காட்டிச்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டியில், ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் (KL Rahul), அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து, இலக்கை நோக்கி பெங்களூர் அணி ஆடி வருகிறது.
இதனிடையே, பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் காட்டிச் (Simon Katich), தனது அணி குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். 'பெங்களூர் அணியைப் பொறுத்தவரையில், கோலி (Kohli) மற்றும் டிவில்லியர்ஸ் (Devilliers) ஆகியோருக்கு பயிற்சியாளரே தேவையில்லை. ஏனென்றால், தங்களுக்கு தாங்களே அவர்கள் சிறந்த பயிற்சியாளர்களாக உள்ளனர். ஏனென்றால், கிரிக்கெட்டை பற்றி, அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் கற்றுள்ளனர்.
இதில், சர்வதேச தரத்திலான வீரராக கோலி இருந்தாலும், இன்னும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் கோலி அத்தனை ஆர்வமாக உள்ளார். அவரது பேட்டிங்கை சிறப்பாக்கும் எந்த விஷயமாக இருந்தாலும், அதனைக் கேட்டு அறிந்து கொள்வார்.
மிகக் குறுகிய காலத்தில், நான் கற்றுக் கொண்ட விஷயம் என்னவென்றால், கோலியைப் போன்ற ஒரு ப்ரொபெஷனல் வீரரை நான் கண்டதேயில்லை. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் சகாப்தமாக (2000 முதல் 2001 ஆம் ஆண்டு) இருந்த காலக்கட்டம் தான் எனக்குத் தோன்றுகிறது' என கோலியின் ஆட்டத்தை பாராட்டி, சைமன் காட்டிச் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்