"அட போங்கய்யா.. இருக்குற 'பிரச்சனை'ல இது வேறயா??.." 'ஆர்சிபி' அணிக்கு வந்த அடுத்த 'தலைவலி'.. வெளியான 'செய்தி'யால் 'அதிர்ச்சி'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசனில், முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த பெங்களூர் அணி, சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் தோல்வியைத் தழுவியது.

"அட போங்கய்யா.. இருக்குற 'பிரச்சனை'ல இது வேறயா??.." 'ஆர்சிபி' அணிக்கு வந்த அடுத்த 'தலைவலி'.. வெளியான 'செய்தி'யால் 'அதிர்ச்சி'!!

சென்னை அணி வீரர் ஜடேஜா (Jadeja), பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார். அது மட்டுமில்லாமல், இந்த போட்டியில் பெங்களூர் அணி ஃபீல்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட சென்னை அணி, அதிக ரன்களைக் குவித்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும், அதன் பிறகு விக்கெட்டுகளை இழந்து, ரன்களை குவிக்கத் தடுமாறியது.

வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த பெங்களூர் அணியின் தொடர் வெற்றிக்கு, சென்னை அணி முட்டுக்கட்டை போட்ட நிலையில், பெங்களூர் அணி வீரர்கள் மற்றும் அதன் ரசிகர்கள், மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், பெங்களூர் அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஒரு அணி 90 நிமிடங்களில், 20 ஓவர்களை வீசி முடிக்க வேண்டும்.

kohli fined Rs 12 lakh for slow over-rate against CSK

இல்லையெனில், அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்படும். இன்றைய சென்னை அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூர் அணி பந்து வீசிய போது, 90 நிமிடத்திற்கும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டது.

kohli fined Rs 12 lakh for slow over-rate against CSK

இதனால், அந்த அணியின் கேப்டன் கோலிக்கு (Kohli) 12 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை கேப்டன் தோனி, கொல்கத்தா கேப்டன் மோர்கன் ஆகியோருக்கு, தாமதமாக பந்து வீசியதால் பெயரில், 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

அதே போல, மூன்று போட்டிகள் இது போன்று அபராதம் விதிக்கப்பட்டால், அந்த கேப்டனுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்