‘எந்த கேப்டனும் நெருங்க முடியாத சாதனை’!.. கோலி இதை மட்டும் பண்ணா அப்பறம் அவர்தான் ‘கிங்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. ஐசிசி முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவதால், இந்த இறுதிப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு சாதனை படைக்க வாய்ப்புள்ளது. அதாவது, விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ளார். அதில் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும், டெஸ்ட்டில் 27 சதங்களும் அடித்துள்ளார். இதில் கேப்டனாக 41 சதங்கள் அடித்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 41 சதங்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. அதனால் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி ஒரு சதம் அடித்தால், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
மற்ற செய்திகள்