‘ஒரு டைம் இல்ல.. 2 டைம் இல்ல.. 3வது முறையும் கோலிதான்’.. அறிவிப்பை வெளியிட்டு அசத்திய விஸ்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்கிற அங்கீகாரத்தை அடைந்து இந்திய கிரிக்கெட் வீரரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இந்திய அணியின் தவிர்க்க முடியாத கேப்டனுமான கோலி கவுரவப்படுத்தப்பட்டுள்ளார்.

‘ஒரு டைம் இல்ல.. 2 டைம் இல்ல.. 3வது முறையும் கோலிதான்’.. அறிவிப்பை வெளியிட்டு அசத்திய விஸ்டன்!

ஆண்டுதோறும் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டு கவுரவப்படுத்தும் இங்கிலாந்து மாத இதழான விஸ்டன் இதழ், இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை உலகின் முன்னணி வீரர்களின் பட்டியலில் டாப் 5 வீரர்களின் வரிசையில் வைத்துள்ளது. தொடர்ந்து 3வது ஆண்டாக இந்த கவுரவ அங்கீகாரத்தை இந்த இதழ் கோலிக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் ஐசிசியின் சிறந்த வீரர், டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்தவீரர் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற கோலி, கடந்த 2018-ல் அனைத்துவிதமான போட்டிகளிலும் 11 சதங்கள் அடித்ததோடு மொத்தமாக 2,735 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் விஸ்டனின் இந்த பட்டியலில் கோலி இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், சாம் குரான், ரோரி பர்ன்ஸ், இங்கிலாந்து மகளிர் அணியின் டேமி பேமன்வுண்ட் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பேசிய விஸ்டன் இதழாசிரியர் லாரன்ஸ் பூத், ‘2014-ம் ஆண்டு மட்டும் திணறிய கோலி, அதன் பின்னர் தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிவரை பேட்டிங்கிலும் மென்மேலும் சிறப்பாகியுள்ளார்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதேபோல் மகளிர் கிரிக்கெட் போட்டியில், சிறந்த வீராங்கனையாக இந்திய அணியைச் சேர்ந்த ஸ்மிர்தி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

VIRATKOHLI, CRICKET