‘தூண் மாதிரி நம்மகிட்ட 2 பேர் இருக்காங்க’..‘அந்த கடைசி 10 ஓவர்தான்’.. புறப்படும் டீம் இந்தியா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்ச்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

‘தூண் மாதிரி நம்மகிட்ட 2 பேர் இருக்காங்க’..‘அந்த கடைசி 10 ஓவர்தான்’.. புறப்படும் டீம் இந்தியா!

உலகக்கோப்பை தொடர் வரும் மே 30 -ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதில் ஜூன் 5 -ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கவை எதிர்கொள்கிறது. இந்திய அனைத்து விதத்திலும் சிறப்பான அணியாக உள்ளதால் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பையில் விளையாட இங்கிலாந்து செல்வதற்கு முன்பு விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், விராட் கோலி பேசியதாவது,‘உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி அனைத்து விதமான திறமைகளையும் வெளிப்படுத்தும். இதற்கு முன்பு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரை விட இந்த வருடம் மிகவும் சவாலாக இருக்கும். சிறிய அணிகள் கூட சிறப்பாக விளையாடி எதிரணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் திறமையை கொண்டுள்ளது. ஆனால் இந்திய அணியில் தூண்கள் போன்று சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் உள்ளனர். மைதானத்தின் தன்மையை விரைவாக உள்வாங்கி இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்’ என பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,‘இந்த வருடம் உலககோப்பை மிகவும் சவாலானதாக இருக்கும். இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசும் திறமை கொண்டவர்கள். இந்திய அணி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே உலகக்கோப்பை வெல்லும்’ என அவர் பேசியுள்ளார்.

ICCWORLDCUP2019, MENINBLUE, RAVISHASTRI, VIRATKOHLI, TEAMINDIA