‘அன்னைக்கு காலையில மேட்ச் பாத்துட்டு இருந்தேன்.. அப்ப யாரோ மரணம்னு செய்தி வந்துச்சு’.. உருகிய கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்டின் மரணம் உலகையே உலுக்கியது. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான விராட் கோலி உருக்கமாக பேசி தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

‘அன்னைக்கு காலையில மேட்ச் பாத்துட்டு இருந்தேன்.. அப்ப யாரோ மரணம்னு செய்தி வந்துச்சு’.. உருகிய கோலி!

இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடர் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்டின், மரண செய்தி தம்மை அதிர்ச்சியடையச் செய்ததாக கோலி உருக்கமுடன் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய கோலி, ‘அன்றைய நாள், நான் காலையில் கூடைப் பந்தாட்டத்தைப் பார்த்து கொண்டிருந்த போது யாரோ மறைந்துவிட்டார் என்கிற செய்தி வந்தது. அவருடைய விளையாட்டுகளை பார்த்துதான் நான் சிறுவயதிலிருந்தே வளர்ந்தேன். ஒருவரை பார்க்கும்போதுதான் நீங்கள் அந்த நபரால் ஈர்க்கப்படுகிறீர்கள். அவரால் நான் ஈர்க்கப்பட்டேன். ஆனால் வாழ்க்கை என்பது மிகவும் சிக்கலான ஒன்று என்பது கடைசியில்தான் தெரியவரும், உதாரணமாக நாம் விளையாடும்போது, நாம் என்ன ஷாட் அடிக்க வேண்டும், எந்த பந்து நமக்கு தேவை என்பதை பற்றியெல்லாம் சிந்திக்கிறோம். ஆனால் வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் மறந்துவிடுகிறோம். நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்தையும் நீங்கள் அனுபவிக்க விரும்புகிறீர்கள் எனில் ஒரு நாளில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட முக்கியம் ஒரு நாளில் நீங்கள் என்ன வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பதுதான்’ என்று கோலி பேசியுள்ளார்.

கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தான், கோப் பிரயண்டும் அவருடன் பயணித்த 9 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அவருடைய 13 வயது மகள் ஜியானாவும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

KOHLI, KOBEBRYANT