ஐயோ, கிளியரா தெரியுது, அது 'நோ பால்'னு... ச்சே, 'அவருக்கு' அவுட் கொடுக்காம இருந்தா 'மேட்சே' மாறியிருக்கும்...! அம்பயர் தூங்கிட்டா இருந்தாரு...? - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி-20 உலக கோப்பை நேற்றைய (24-10-2021) தொடரில் நோ பாலுக்கு அவுட் கொடுத்த சம்பவம் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
நேற்று டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. நேற்றைய ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் இந்தியா தோல்வியடைந்தது.
துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நேற்றைய ஆட்டத்தில் ஷாகின் அப்ரிடியின் பந்து வீச்சு இந்திய அணிக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்தது. முதல் ஓவரிலேயே இந்திய அணியின் ரோஹித் சர்மா அவுட் ஆனது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடியாக இறங்கியது என்று தான் கூற வேண்டும்.
அதன்பின், ஷாகின் அப்ரிடியின் அடுத்த ஓவரின் முதல் பந்திலே கே.எல். ராகுல் விக்கெட்டை பறிக்கொடுத்தார். தற்போது கே.எல்.ராகுலின் விக்கெட் நோபால் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
ஷாகின் அப்ரிடி பந்துவீசும் போது அவரது கால் கிரீஸ்-க்கு வெளியில் இருப்பதாக கிரிக்கெட் நெட்டிசன்கள் கூறுகின்றனர். மேலும் அந்த விஷயம் தொடர்பான புகைப்படத்தில் விராட் கோலி பேட் கீரிஸ் ஆகியவை தெளிவாக தெரிகிறது.
இதனை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து வரும் இந்திய ரசிகர்கள் அம்பயர் இதனை சரியாக கவனிக்காமல் அவுட் கொடுத்துவிட்டதாக தங்களது ஆதங்கத்தை சமூகவலைத்தளத்தில் வெளிட்டு வருகின்றனர்.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது அம்பயர் தூங்கிவிட்டார் எனக் கூறி நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பதிவிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட்கள் வித்யாசத்தில் 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேலும், பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஷம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர்.
Why nobody is taking about this,
This was a no ball 😡#KLRahul #indiaVsPakistan #India pic.twitter.com/MWmhIxzyro
— Devil Aadi 🦁 (@DevileAadi) October 24, 2021
மற்ற செய்திகள்