"'விராட்' கோலிக்கு அடுத்ததா... 'இந்தியா'வோட கேப்டனாக இவருக்கு தான் 'சான்ஸ்' அதிகம்.." கணித்து சொல்லும் முன்னாள் கிரிக்கெட் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐ.பி.எல் போட்டிகள் வரும் 19 ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் மிக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா, விராட் கோலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கே.எல் ராகுலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 32 வயதை நெருங்கும் விராட் கோலி இந்திய அணியை சிறந்த முறையில் வழிநடத்தி வரும் நிலையில், அவரது காலத்திற்கு பிறகு கே.எல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவித்தார். கே.எல். ராகுலிடம் ஸ்டைலான ஆட்டமும், சிறந்த மனோபாவமும் இருப்பதாக அவர் கூறினார்.
கோலிக்கு அடுத்தபடியாக, ரோகித் சர்மா உள்ள நிலையில், கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒரே வயதை ஒத்து இருப்பதால் ரோகித் சர்மாவுக்கு இந்தியா அணியின் கேப்டனாகும் வாய்ப்பு குறைவாக உள்ளது என்றார்.
இதனால், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி கேப்டன் பதவியை துறந்த போது, இந்திய அணியின் கேப்டன் பதவி கோலிக்கு கிடைத்தது போல, கோலியும் ஒரு நாள் தனது கேப்டன் பதவியை விலக வேண்டிய தருணம் வரும். அப்போது அந்த பதவி ராகுலுக்கு கிடைக்கும் என ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
கே.எல் ராகுல், ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடவுள்ள நிலையில், அணியின் கேப்டன் ஆகவும் அவர் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்