'முதல் போட்டியில் நடந்த அந்த ஒரு சம்பவம்’!!... ‘அதனால தான் எல்லாமே போச்சு!... ‘ரொம்ப கஷ்டமா இருக்கு’!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றால், தங்களுடைய பிளே ஆஃப் வாய்ப்பு பாதித்துள்ளதாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 19-வது ஓவரில், மயங்க் அகர்வாலும், ஜார்டனும் இரு ரன்கள் ஓடி எடுத்தார்கள். ஆனால் ஓடி முடிக்குமபோது கிரீஸை பேட் தொடாததால், ஒரு ரன்னைக் குறைவாக வழங்கினார் நடுவர் நிதின் மேனன்.
ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில், ஜார்டனின் பேட் கிரீஸைத் தொட்டது நன்கு தெரிந்தது. கடைசியில் ஆட்டம் டையாகி ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றதில், டெல்லி அணி வெற்றி பெற்றது. அந்த இரண்டு ரன்களை நடுவர் வழங்காதது, ஆட்டத்தின் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
நடுவரின் ஷார்ட் ரன் முடிவுக்கு பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில், பிளே ஆஃப் செல்ல வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில், சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்ததால், அந்த அணி பிளே ஆஃப் செல்லும் கனவு தகர்ந்து, தொடரிலிருந்து வெளியேறியது.
இதுகுறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், ‘பல விஷயங்கள் வேறுவிதமாக நடந்திருக்கலாம். இது ஏமாற்றத்தை அளிக்கிறது. பல ஆட்டங்களில் நாங்கள் சாதகமான நிலையில் இருந்தோம். ஆனால் வெற்றிக்கோட்டை எங்களால் தொட முடியாமல் போனது. இதற்கு முழுப் பொறுப்பு நாங்கள் தான். எங்களுடைய முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் ரன் விவகாரம் எங்களை மிகவும் பாதித்துவிட்டது. எல்லோரும் தவறுகள் செய்வோம். இந்த முறை ஓர் அணியாக சில தவறுகளை செய்துள்ளோம். அதை ஏற்றுக்கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்