"இப்படி ஒரு சான்ஸ மிஸ் பண்றதா?".. கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்ட கே எல் ராகுல்.. "ரோஹித் ரியாக்சன பாக்கணுமே"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் நடந்து முடிந்திருந்த நிலையில், தற்போது வங்காளதேசத்திற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

"இப்படி ஒரு சான்ஸ மிஸ் பண்றதா?".. கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்ட கே எல் ராகுல்.. "ரோஹித் ரியாக்சன பாக்கணுமே"

இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் போட்டி, நேற்று (04.12.2022) நடைபெற்றிருந்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் உள்ளிட்டோர் மீண்டும் வங்காளதேச அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கி இருந்தனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது, கே எல் ராகுல் மட்டும் 73 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 186 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

kl rahul miss easy cacth against bangladesh in first odi

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வங்காளதேச அணி தடுமாற்றம் கண்டதால் இந்திய அணி தான் வெற்றி பெறும் என ரசிகர்கள் கருதினர். ஆனால், கடைசி விக்கெட்டுக்கு கைகோர்த்த மெஹிதி ஹாசன் மற்றும் முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோர் சிறப்பாக ஆடி 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் அணியை வெற்றி பெற செய்து இந்திய அணிக்கு அதிர்ச்சியும் அளித்திருந்தனர். இந்த வெற்றியின் காரணமாக, வங்காளதேச அணியும் ஒரு நாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி வெற்றி பெறும் சூழல் இருந்த போதும் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு மத்தியில், கே எல் ராகுல் தவற விட்ட வாய்ப்பு குறித்த வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

kl rahul miss easy cacth against bangladesh in first odi

கடைசி விக்கெட்டிற்காக, மெஹிதி ஹாசன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஷர்துல் தாக்கூர் வீசிய 43 ஆவது ஓவரில், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கே எல் ராகுல், மெஹிதி ஹாசனின் எளிதான கேட்ச் வாய்ப்பை தவற விட்டார். அந்த கேட்சை பிடித்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். இதை பார்த்ததும் கேப்டன் ரோஹித் ஷர்மா கொடுத்த ரியாக்ஷனும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

ROHIT SHARMA, KLRAHUL, IND VS BAN

மற்ற செய்திகள்